பாக்யலட்சுமி சீரியலில் பிரபல தமிழ் சினிமா ஹீரோ; வைரல் புகைப்படம்

விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் களமிறங்கும் முன்னணி சினிமா ஹீரோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் களமிறங்கும் முன்னணி சினிமா ஹீரோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் களமிறங்கும் முன்னணி சினிமா ஹீரோ; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்யலட்சுமி' சீரியலில், பிரபல ஹீரோ ஒருவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் பாக்யலட்சுமி சீரியலுக்கு இல்லதரசிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தன் முன் விழும் ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறும் இல்லத்தரசியின் கதை தான் பாக்யலட்சுமி சீரியல்.

பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வரும், ஸ்ரீமோகி என்ற சீரியலின் ரீமேக்காக, தமிழில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அசத்தலான கதை, அதிரடி திருப்பங்கள் என நகர்ந்து வரும் சீரியல் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. பல்வேறு சேனல்களில் தற்போது புதிதாக நிறைய சீரியல்கள் வந்தாலும், இந்த சீரியலுக்கான மவுசு இன்னும் குறையவில்லை.

தனது முன்னாள் கணவரும் அவரது காதலியும் சேர்ந்து கொடுக்கும் தொல்லைகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சமாளித்து வருகிறார் பாக்யா. இப்படியாக பரபரப்பான காட்சிகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல சினிமா நடிகர் இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

அந்த ஹீரோ வேறு யாரும் அல்ல, நடிகர் சித்தார்த் தான். பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் சித்தா படம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், இந்த சீரியலில் சித்தார்த் பாக்கியாவுக்கு ஆதரவாக மிகவும் முக்கியமான காட்சியில் நடித்துள்ளதாகவும், இவரின் காட்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ரா சித்தார்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Siddharth Vijaytv Bakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: