scorecardresearch

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா; ஜோடியாக வந்த சித்தார்த், அதிதி ராவ்

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா; ஜோடியாக வந்த சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா; ஜோடியாக வந்த சித்தார்த், அதிதி ராவ்

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து வந்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 6 தேதி) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்கு நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து வந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடிகர் சித்தார்த் பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்திலும் சித்தார்த் நடித்துள்ளார். அதிதி ராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். இருவரும் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இருவருமே மௌனம் காத்து வந்தனர்.

இந்தநிலையில், இருவரும் இணைந்து பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Siddharth and aditi rao comes together at ponniyin selvan audio launch