நடிகர் சிம்பு என்ற சிம்பரசன் எப்போதும் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது தொடர் தோல்விகளும், அவரை சுற்று கட்டமைக்கப்பட்ட தவறான கற்பிதங்களும் அவரது நடிப்பு தொழிலை வெகுவாக பாதித்தது. ’இனி அவ்வளவுதான் சிம்பு’ என்றுதான் பலரு நினைத்துக்கொண்டிருந்தனர். சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை, தனிபட்ட ஒழிக்கம் இல்லை என்று பல்வே சர்ச்சைகளும் ஒருபுறம் பரவிக்கொண்டு இருந்தது. மேலும் அவர் அதிகமாக உடல் எடை கூடியிந்தார். ஒரு நாளைக்கு 3 முதல் 4 பிரியாணி சாப்பிடுவார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. மேலும் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டதாக பல முறை அறிவிப்புகள் வெளியானது. படம் வெளியாகும் என்று அறிவித்த பிறகும் நள்ளிரவில் படம் வெளியாகாது என்ற செய்திகள் வந்தன. இறுதியாக படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. படத்தில் அவ்வளவு உடல் எடை குறைத்திருந்தார். இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் 2 நாட்களில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சிம்பு இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு பேட்டி அளித்துள்ளார். இதை விரிவாக பார்க்கலாம்.
வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு போல உங்களது முந்தைய படத்திற்கு நடக்கவில்லையே ஏன் ?
2011-ம் ஆண்டு வெளியான ’ஒஸ்தி’ படத்திற்கு பிறகு தற்போதுதான் ஒரு மிகப்பெரிய இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த படத்தில் உச்ச நடச்சதிரங்கள் யாரும் நடிக்கவில்லை என்பதால் இது தேவைப்பட்டது. இது ஒரு மாஸ் படம் இல்லை. எதார்த்தமான கதை என்பதால், படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதால் இதை செய்தோம். இது பலன் அளித்துள்ளது என்பது மகிழ்ச்சி.
’வெந்து தணிந்தது காடு’ கதை பற்றி கூற முடியுமா ?
உண்மையான நபரின் கதை இது. எழுத்தாளர் ஜெயமோகன் இதற்கான திரைக்கதையை எழுதி உள்ளார். கதையை பாதி எழுதிவிட்டு, சமந்தபட்ட நபரை நேரில் சந்தித்து கதைக்கு தேவையான விஷயங்கள் கேட்டறிந்துள்ளார். இது உங்களைப்போல விமர்சர்களுக்கான படம்தான். நீங்கள்தான் ஏன் ஹிரோக்கள் தரமான படத்தை தேர்வு செய்து நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இப்படத்தில் எதிரிகள் யாரும் காற்றில் பறக்க மாட்டார்கள்.
மற்ற கேங்கிஸ்டர்(gangster) படங்களுக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு என்ன வேறுபாடு ?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், துபாய்க்கு செல்வார்கள், அங்கு அவர்கள் சந்திக்கும் சிக்கலை படம் பேசும். ஆனால் அப்படிபட்ட படங்கள் மாஸ்/ கமெர்ஷியல் படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கிய கதாபாத்திரம் புலம்பெயர்ந்த தொழிலாளிதான். ஆனால் அவர் மும்பை செல்கிறார். படத்தில் சண்டை காட்சிகள் இடம் பெறும். ஆனால் அது வலுக்கட்டாயமாக மாஸாக திணிக்கப்படவில்லை. மிக எதார்த்தமாக அமைந்திருக்கும். அதுபோலத்தான் காதல் காட்சிகளும் கூட. ரஞ்சித் இயக்கி வெளியான ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் கூட சண்டை காட்சி உண்டு. அதன் மையக் கருவே குத்துச்சண்டைதான். இதுபோலத்தான் ’வெந்து தணிந்தது காடு’ படமும். இது போன்ற படங்கள் வெற்றிபெறும்போது உச்ச நடச்சத்திரங்களும் தனித்துவம் வாய்ந்த கதையில் நடிப்பார்கள். உதராணத்திற்கு சுப்பிரமணியபுரம் படத்தில் அஜித் சார் நடித்திருந்தால். சசிகுமார் அல்லது ஜெய் கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் எப்படி இருக்கும். தமிழ் சினிமா ஒரு மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்.
நீங்களும் இயக்குநர் கௌதம் மேனனும் இணைந்து பணியாற்றும்போது, பல எதிர்பார்ப்பு உண்டாகிறது. இந்த எதிர்பார்ப்புகளை இப்படம் ஈடு செய்யுமா ?
முதலில் நானும் கெளதம் மேனனும் ஒரு காதல் படதிற்காக “ நதிகளில் நீராடும் சூரியன்” என்ற படத்திற்காக இணைவதாக இருந்தோம். ஆனால் வழக்கமான கெளதம் மேனம் திரைப்படங்கள் மீண்டும் செய்ய வேண்டாம் என்று நான் நினைத்தேன். மேலும் ’மாநாடு’ படத்தின் வெற்றி என் எண்ணத்தை மாற்றி உள்ளது. ஒரு சோதனை முயற்சிதான் மாநாடு படம். அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஒருவேளை மாநாடு படம் தோல்வியடைந்திருந்தால் இதுபோல ஒரு முயற்சியை செய்திருப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. கொரோனா ஊரடங்கு சினிமா ரசிகர்களின் ரசனையை மாற்றியிருக்கிறது.
கெளதம் மேனுடம் இணைந்து பணியாற்றிதிலேயே இதுதான் கடினமான பயணமா?
அப்படி சொல்ல இயலாது. இத்திரைப்படத்தில் நடிக்கும்போது சில இடங்களில் கடினமாகத்தான் இருந்தது. சிலம்பரசன் என்ற கதாநாயகனை வெளிக்காட்டாமல் நடிப்பதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. இதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஒரு சாதாரண மனிதனைப் போல் நான் சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும். படத்தில் ஒரு நீளமான காட்சி இருக்கும். ஒரே டேக்கில் அதை எடுத்திருக்கிறோம். இதில் சண்டை எப்போது ஆரம்பித்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தொடர்ந்து சண்டை நடக்கும். உண்மையான சண்டைபோல் இருக்கும் அது. நடிக்கும்போது இது மிகவும் சவாலாக இருந்தது.
’முத்து’ கதாபாத்திரத்திற்கு நீங்கள் எப்படி உங்களை தயார்படுத்திக்கொண்டீர்கள் ? யாரையாவது முன்மாதிரியாக எடுத்துகொண்டீர்களா?
ஒரு முறை நடிகர் சிவாஜி கணேஷன் சார் கூறுகையில் , அவர் சந்திக்கும் மனிதர்களையும் அவரது உடல் மொழியையும் உற்று கவனிப்பார் என்றும் பின்பு அதை நினைவுப்படுத்து நடிப்பார் என்று கூறியுள்ளார். இதைத்தான் நானும் செய்தேன். ஒருவரை மட்டும் முன்மாதிரியாக வைத்து நடிக்கவில்லை. என் வாழ்வில் சந்தித்த தொழிலாளர்களின் உடல் மொழியை நினைவுப்படுத்திக்கொண்டேன். மேலும் இயக்குநர் கெளதமிடம் வேலை செய்வது எளிது. அவர் எழுதிய வசனங்களை அப்படியே வெளிக்கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படமாட்டார். நாம் அதில் சில மாற்றங்களை செய்துகொண்டாலும், எதிதார்த்தமாக இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்.
வியக்கவைக்கும் வகையில் உடல் எடையை குறைத்துவிட்டீர்கள்? அது பற்றி சொல்லுங்கள்.
இதை நான் முறை முறையாக செய்யவில்லை. ’சிலம்பாட்டம்’ படத்திற்காக தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க எடை அதிகரித்தேன் பின்பு எடை குறைத்தேன். எனது மற்ற கதாபாத்திரத்திற்காகவும் இதை செய்திருக்கிறேன். மாநாடு திரைப்படத்திற்கு முன், நான் வேறு எண்ண ஓட்டத்தில் இருந்தேன். எதைப்பற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை. அதனால் என் உடலை என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை. மாநாடு படத்திற்காக உடல் எடை குறைந்ததும், நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று அனைவரும் கூறினார்கள். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கெளதம் 19 வயது நபரை போல் நான் மாற வேண்டும் என்றார். இதனால் மேலும் எடை குறைத்தேன். எனது அடுத்த படமான ’பத்து தல; படத்தில் நான் எடை அதிகரிக்க வேண்டும்.
உடலை பாதிக்கும் வகையில் இப்படி ஒரு உடல் எடை குறைப்பு அவசியமா ?
ஜெயமோகனிடம் கெளதம் நான்தான் நடிக்கப்போவதாக கூறியபோது, இந்த கதைக்கு அவர் சரிவரமாட்டார் என்று கூறினார். நான் கெளதமிடம்,உடலை ஓட்டுமொத்தமாக மாற்றிவிட்டு வருகிறேன் என்று கூறினேன். இதுபோல உடல் எடை குறைந்த பிறகு படத்திற்கான போட்டோ ஷூட் செய்தோம். அப்போது என்னை பார்த்த ஜெயமோகன், பசியில் வாடும் நபரைப்போல் உள்ளேன் என்று கூறினார். நான் எடையை மட்டும் குறைக்கவில்லை என்று சதைகளையும் தளர்வாக்கினேன். எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு உண்மையான படத்தில் நடிக்க வேண்டும் என்பதால் இதை செய்தேன்.
வெந்து தணிந்தது காடு பாகம் -2 எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. இது உண்மையான அல்லது இப்போது உருவான டிரெண்டால் இது கூறப்படுகிறதா?
ஆம் பாகம் 2 படமாக்க உள்ளோம். ஆனால் இதுப்பற்றி இப்போது கூற விரும்பவில்லை. வெந்து தணிந்தது காடு வெற்றிபெற்றால், இது தொடர்பாக பேசலாம் என்று முடிவு செய்திருந்தோம். முதல் பாகத்தின் வெற்றிதான் அடுத்த பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, உங்களது பேச்சு மற்றும் படங்களின் தேர்வில்கூட ஒரு மாற்றம் வந்திருக்கிறது? அது பற்றி ?
வயதாகிறது. இதுதான் முக்கிய காரணம். இளமையில் நான் வேறு மனிதனாக இருந்திருக்கிறேன். ஆனால் அனுபவங்கள் என்னை மாற்றியிருக்கிறது.
குழந்தை பருவத்திலிருந்து சினாவில் உள்ளீர்கள். வெற்றியும் தோல்வியையும் சமமாக பார்த்துவிட்டீர்கள். எது உங்களை தொடர்ந்து செயல்பட வைக்கிறது?
நான் எதற்கு பின்னாலும் ஓட விரும்பவில்லை. எனக்கென்று ஒரு தனி இடத்தை நான் பெற விரும்பவில்லை. இயற்கையாகவே எனக்கு என்ன வருகிறதோ, அதை கடினமாக உழைத்து வெளிகாட்ட முயற்சி செய்கிறேன். இந்த முயற்சியின் பலனகள், எனக்கான இடத்தை பெற்றுதந்தால். நன்றியுடன் இருப்பேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.