Advertisment

சினிமா ஆகிறார் சில்க் ஸ்மிதா: அதே காந்தக் கண்களுடன் கதாநாயகி தேவையாம்

silk smitha life story : இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
சினிமா ஆகிறார் சில்க் ஸ்மிதா: அதே காந்தக் கண்களுடன் கதாநாயகி தேவையாம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மிதா. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் .

Advertisment

அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர்.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்

கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சும மணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்

பல விளம்பரப் படங்களை இயக்கியவரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்

"சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Silk Smitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment