Advertisment

சிலுக்குவார்பட்டி சிங்கம்: விஷ்ணு விஷால் படம்... சிவகார்த்திகேயனுக்கு கவுரவம்

Silukkuvarupatti Singam: சிவகார்த்திகேயன் படத்தின் டயலாக்கை பெயராகக் கொண்டு ஒரு படம் ரிலீஸ் ஆவதை சிவாவின் ரசிகர்கள் பெருமையாக பார்க்கிறார்கள்.

author-image
WebDesk
Dec 05, 2018 20:32 IST
New Update
Silukkuvarupatti Singam new film in Sivakarthikeyan film dialogue, சிலுக்குவார்பட்டி சிங்கம்

Silukkuvarupatti Singam new film in Sivakarthikeyan film dialogue, சிலுக்குவார்பட்டி சிங்கம்

நடிகர் சிவகார்த்திகேயனின் பட டயலாக்கும், பாடல் தலைப்பும் படமாகிறது தமிழ் சினிமாவில்! பொதுவாக ரஜினிகாந்துக்கு அமைகிற அம்சம் இது!

Advertisment

பெரிய பின்னணி இல்லாமல், சிபாரிசு இல்லாமல் முன்னணிக்கு வந்த பிரபலங்கள் பட்டியல் எம் ஜி ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, விக்ரம் வரை தொடர்ந்தது. அதற்குபின் வாரிசுகளின் ஆதிக்கம், பணம் இருந்தால் - சிபாரிசு இருந்தால் மட்டுமே சினிமாவில் நுழையவே முடியும் என்கிற நிலை உருவானது.

இந்தக் காலகட்டத்தில் சாதாரணமாக நுழைந்து தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் வசூல் ஹீரோவாக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். பெண்கள், குழந்தைகள் சகிதமாக குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக இருப்பதும் சிவகார்த்திகேயனின் பிளஸ்!

ரஜினி அரசியலுக்குள் நுழைகிற வேளையில் சினிமாவில் சிவகார்த்திகேயனின் இடம் இன்னும் உச்சம் பெறும் வாய்ப்பு இருக்கிறது. 1980-களில் எம்ஜிஆர் படங்களின் டயலாக், போட்டோவை அடுத்த தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தினர். அடுத்து ரஜினியின் ரசிகனாக தங்களை அடையாளப்படுத்தி சினிமாவில் ஓப்பனிங் பெற்றவர்கள் உண்டு.

தற்போது சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்க டயலாக்கான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்கிற டயலாக் பெயரில் புதிய படம் வெளியாக இருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷால், ரெஜினா கஸண்ட்ரா நடித்திருக்கும் அந்தப் படம் டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சிவகார்த்திகேயன் படத்தின் டயலாக்கை பெயராகக் கொண்டு ஒரு படம் ரிலீஸ் ஆவதை சிவாவின் ரசிகர்கள் பெருமையாக பார்க்கிறார்கள்.

திராவிட ஜீவா

#Vishnu Vishal #Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment