/tamil-ie/media/media_files/uploads/2019/05/Simbu.jpg)
simbu, director muthiah, komban, vantha rajavathaan varuven, devarattam, venkatpprabhu, hari, சிம்பு, முத்தையா, தேவராட்டம்
நடிகர் சிம்பு, அடுத்து வரிசையாக படத்தில் நடிக்க உள்ளார். அதில் புதிதாக இயக்குனர் முத்தையாவும் இணைந்துள்ளார்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு, சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் சுந்தர் சி இயக்கத்திலான வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படம் சுமாராகத்தான் ஓடியது.
உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சிகிச்சை பெற வெளிநாடு சென்றிருந்த சிம்பு, தம்பி குறளரசனின் திருமணத்தில் பங்கேற்றார். உடல் எடை குறைந்து செம ஸ்டைலிஷ் ஆக இருந்தார்.
அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளதாக கூறியுள்ள சிம்புவிடம், வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, புது இயக்குநர் நாரதன் இயக்கத்தில் முப்தி ரீமேக், தொட்டி ஜெயா 2, ஹரி இயக்கத்தில்ஒரு படம் என நீண்ண்ண்ண்ண்ண்ட பட்டியலே உள்ளது.
இதனிடையே, கோவில் படத்திற்கு பிறகு கிராமப்புற கதைகளில் நடிக்கவே இல்லையே என்ற எண்ணம் சிம்புவிற்கு தோன்றியதோ என்னவோ... நான் நடிக்க உள்ள படங்களின் பட்டியலில், தற்போது முத்தையாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
முத்தையா இயக்கத்திலான சிம்பு படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முப்தி ரீமேக் படத்தையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் என கிராமப்புற கதைகளத்தில் இயக்கும் முத்தையாவிற்கு, சிம்பு சரிப்பட்டு வருவாரா என்பது இந்த படம் துவங்கும்போதுதான் தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.