/tamil-ie/media/media_files/uploads/2018/01/a34.jpg)
பிக்பாஸ் மூலம் தனது கள்ளகபடமற்ற குணத்தால் புகழ்பெற்று, தனக்கென்று ஒரு ஆர்மியை தமிழகத்தில் உருவாக்கியவர் ஓவியா. அந்த ஷோவின் பாதியில் இருந்து அவர் வெளியேறினாலும், மக்கள் மனதில் முழுதாக இடம் பிடித்தார்.
அப்போதே, சிம்பு ஓவியாவுடன் இணைந்து படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஓவியாவை அவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சிம்பு, மிர்ச்சி விஜய் ஆகியோருடன் ஓவியா இருக்கும் ஒரு புகைப்படம் நேற்று வெளியானது. இதனால், சிம்புவுடன் ஓவியா படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவியது.
இப்போது, நியூ இயர் 2018 பாடலொன்றை ஓவியா பாட, சிம்பு அதற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 'மரண மட்ட' என தொடங்கும் அப்பாடலை ஒவியாவே பாடியுள்ளார்.
ரசிகர்களுக்கு புது வருட பரிசாக சிம்பு இதை கொடுத்துள்ளார். இந்த பாடலின் வரிகளை சிம்புவும், மிர்ச்சி விஜய்யும் இணைந்து எழுதியுள்ளனர். அனிதா உதீப் இயக்கும் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலுக்குப் பிறகு 'ஆஃப்டர் சரக்கு '#DesiKuthu என்கிற பெயரில் இன்னொரு பாடல் ஒன்றும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடல் இதோ,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.