சென்னையில் தொடங்கியது சிம்புவின் ’செக்க சிவந்த வானம்’ ஷூட்டிங்!

இந்த படத்தை விரைவில் வெளியிட மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் முதன் முதலாக சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேது போலீஸாகவும், அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் வில்லனாக நடிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, இந்த படத்தில் சிம்பு தோன்று லுக் மற்றும் படத்தின் ஃப்ர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து தற்போது, ஷீட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தை விரைவில் வெளியிட மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார்.

சமீபத்தின் வெளிவந்த சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வியை தழுவிருந்த நிலையில், செக்க சிவந்த வானம் அவருக்கு கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றியை பெற்று தரும் என்று அவரின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

×Close
×Close