/tamil-ie/media/media_files/uploads/2019/04/Kuralarasan-wedding.jpg)
Kuralarasan wedding: நடிகர் சிம்புவின் தம்பியும், இசையமைப்பாளருமான குரளரசன் தனது காதலியை கரம் பிடித்தார்.
கடந்த வெள்ளிக் கிழமை நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், நபீலா என்பவருடன் இஸ்லாம் முறைப்படி குரளரசனின் திருமணம் நடந்தது.
மாநாடு திரைப்படத்திற்கான முன் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் சிம்பு, தனது தம்பியின் திருமணத்திற்காக லண்டனிலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார். திருமணத்தில் கலந்துக் கொண்ட சிம்புவின் படங்கள் இணையத்தில் வைரலாகின.
இத்திருமணத்திற்காக நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தனது இளையமகன் குரளரசனுடன் கோலிவுட் பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.
ஏப்ரல் 29-ம் தேதியான நாளை நடக்கும், திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர், குரளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தான் எம்மதமும் சம்மதம் என்பதை மதிப்பவன் எனவும், தனது மகள் கூட கிறிஸ்டியன் எனவும் குறிப்பிட்டார் டி.ஆர்.
இதற்கிடையே சிம்புவுக்கு எப்போது கல்யாணம்? என்கிறார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.