AAA படத்தின் விவகாரத்தில் சிம்பு தொடர்ந்துள்ள வழக்கில் விஷால் விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னே ரிலீஸ் ஆனது. படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் எஸ்.டி.ஆர் இந்த படத்துக்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாகவும் ஆனால் முழுதாக 30 நாட்கள் கூட நடித்துத் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
சிம்பு - விஷால் மோதல்
இந்தப்படத்தின் மூலம் எனக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதை அவர் திருப்பித்தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை தீர்க்க போய் விஷாலுக்கும் சிம்புவிற்கு முட்டிக்கொண்டது. மேலும் அந்தப் படத்திற்கு ரெட் கார்டு போட முயற்சி செய்தும் அது முடியாமல் போனது.
இந்நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் என் மீது அவதூறு பரப்புவதாகவும், தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு கட்டப்பஞ்சாயத்து போல நடைபெறுவதாகவும், என் பெயரை கலங்கடித்ததற்கு நஷ்ட ஈடாக மைக்கேல் ராயப்பன் தமக்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டுமெனவும் சிம்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிம்பு தொடர்ந்துள்ள வழக்கில் மைக்கேல் ராயப்பனும், விஷாலும் விளக்கமளிக்கவேண்டும் என வழக்கை ஒத்திவைத்தது.