குடும்பத்துடன் தாய்லாந்து ட்ரிப்: வைரலாகும் சிம்புவின் படம்!

STR: இதற்கிடையே ’மாநாடு’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகளும் வலம் வருகின்றன. 

STR family trip
நடிகர் சிம்புவின் குடும்ப சுற்றுலா

நடிகர் சிம்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா, தம்பி குறளரசன் மற்றும் அவரது மனைவி, சிம்புவின் தங்கை இலக்கியா, அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோருடன் சிம்பு விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறுபுறம், ’மஃப்டி’ படத்துக்கான 2 நீண்ட ஷெட்யூலை முடித்திருக்கிறார் சிம்பு. கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார். தவிர, இயக்குநர் வெங்கட்பிரபுவின் ’மாநாடு’ படமும் சிம்புவின் கைவசம் உள்ளது. ஆனால் அந்தப் படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே ’மாநாடு’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகளும் வலம் வருகின்றன.

தவிர சீமான் இயக்கும் ஒரு படத்திலும் சிம்பு நடிப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும் தற்போது அந்தப்படம் ‘ஹோல்டில்’ வைக்கப்பட்டுள்ளது.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Simbu family trip str thailand trip

Exit mobile version