ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து கடந்த 2007ம் ஆண்டு வெளியான ‘மொழி’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றின் மொழி’ என்ற பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு அவரே ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாண்ட்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, பிரவீன் கே.எல். எடிட் செய்கிறார்.
இந்தியில் கடந்த வருடம் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக் இது. வித்யாபாலன் நடித்த ரேடியோ ஜாக்கி வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணமான பெண் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. 50 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகராகவே அவர் இப்படத்தில் நடித்துள்ளார். ரேடியோ ஜாக்கியான ஜோதிகா, நடிகர் சிம்புவிடம் இன்டர்வியூ செய்வது போன்ற காட்சி பட மாக்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘சரவணா; படத்தில் நடித்த பிறகு சிம்பு – ஜோதிகா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
#STR shot for an important cameo appearance in #Jyothika ‘s #KaatrinMozhi today..
An exciting prospect.. pic.twitter.com/h2RKZGR1Xa
— Ramesh Bala (@rameshlaus) 7 July 2018
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Simbu jothika acts in film again
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை