/tamil-ie/media/media_files/uploads/2017/10/simbu-1.jpg)
simbu
Simbu's Latest Photo: சுந்தர் சி-யின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் இறுதியாக நடித்திருந்தார் நடிகர் சிம்பு. தற்போது ஆன்மீக பயணமாக சபரிமலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்புவின் சமீபத்திய படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. சால்ட் அண்ட் பெப்பர் தாடியுடன் தலையில் கேப்புடன் சிம்பு இருக்கும் அந்தப் படத்தை அவரது ரசிகர்கள் வெகுவாக லைக் செய்து வருகிறார்கள். மாநாடு படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், நடிகர் சிம்புவும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் கைகோர்க்க ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் படம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் துவங்கும் எனத் தெரிகிறது.
வரும் ஜனவரி 20ம் தேதி #மாநாடு படப்பிடிப்பு கோவையில் தொடங்குகிறது. பிறகு ஊட்டியில் நடக்கிறது. விமானத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது.@kalyanipriyan ஹீரோயின்.#மகா படத்திலும் விமானத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது.@vp_offl#STRUpdate#STR#Simbu#Silambarasanpic.twitter.com/FAkiKUi40o
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) December 20, 2019
சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில், முழுமையான நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்படத்தில் வில்லனாக நடிக்க கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப்பை தயாரிப்பாளர்கள அணுகியுள்ளதாகவும் தெரிகிறது.
தவிர, நடிகர் கெளதம் கார்த்திக்குடன் திரையைப் பகிர்ந்துக் கொள்ளும் ’மஃப்டி’யின் தமிழ் ரீமேக்கில் சிம்பு அடுத்து நடிக்கிறார். அதோடு யு.ஆர்.ஜமீல் இயக்கி வரும் ஹன்சிகாவின் 50 வது படமான மஹா படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.