யுவன், மெட்ரோ சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு!

பாடல் ஹிட்டாகியிருப்பதால், மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

actor shrish

மெட்ரோ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சிரிஷ். தமிழிலும் பின்னர் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது. இரண்டு மொழியிலும் படம் வெற்றி பெற்றது. நாயகன் சிரிஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது.

மெட்ரோ நாயகன் சிரிஷ் அடுத்து நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்தில் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. சமூக வலை தளங்களில் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில் ரசித்துள்ளனர். பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது கூடுதல் சுவை.

பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருப்பதால், மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, ராஜா ரங்குஸ்கி நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ’இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.

அடுத்த ஹிட் டுக்கு ஆயத்தமாகி விட்டார் மெட்ரோ சிரிஷ்.

Web Title: Simbu lauded metro shirish

Next Story
கார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express