Advertisment
Presenting Partner
Desktop GIF

மாநாடு ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; முதல்வர் வீடு முன் போராட்டம் நடத்துவேன் - டிஆர் ஆவேசம்

Simbu Maanadu movie release postponed T Rajender furious speech: சிம்புவை மிரட்டுறாங்க, சிம்புக்காக கோட்டை முன்னாலும் போராட்டம் பண்ணுவேன், முதல்வர் வீட்டின் முன்னாலும் போராட்டம் பண்ணுவேன்; டி.ராஜேந்தர் ஆவேசம்

author-image
WebDesk
New Update
மாநாடு ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு; முதல்வர் வீடு முன் போராட்டம் நடத்துவேன் - டிஆர் ஆவேசம்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு, முதல்வர் வீட்டின் முன் உட்கார்ந்து போராடுவேன் என சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபாவளிக்குப் பிறகு தான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில், நீடித்த பெரும் கொரோனா சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறது மாநாடு. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக படம் வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவு எடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பது வியாபார புத்திசாலித்தனம் அல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம் தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். யாரும் நட்டம் அடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும், அதன் வெற்றியையும் பலியாக்க வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும், சிம்புவின் மாநாடு படமும் தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ரஜினி, சிம்பு படங்கள் ஒன்றுக்கொன்று ஒன்று மோதும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் தன் மகன் படங்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து பிரச்சனை கொடுகிறார்கள் என்று டி.ராஜேந்தர் ஆவேசமாக பேசி இருகிறார். அப்போது, AAA படப்பிரச்சனையில் சிலம்பரசனை மிரட்டுறாங்க. கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க. ஏன் படம் தோல்வி அடைந்த எல்லா நடிகர்களுக்கும் இந்த பிரச்சனை தான். ஒரு படம் ரிலீஸ் ஆகணும்னா, கழுத்துல கத்தி வைக்குறாங்க. அத்தனை கோடி பறிமுதல் பண்றாங்க. இவங்க என்ன மிரட்டி கொள்ளையடிக்கற கோஷ்டியா? மடக்கி பணம் பறிக்கக்கூடிய மாஃபியாவா? என்று ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தர் சங்கம் மீது டி.ஆர் குற்றம் சாட்டியுள்ளார்.

publive-image

அப்போது, தீபாவளிக்கு அண்ணாத்த ரிலீஸ் ஆவதால் தான் மாநாடு வெளியாகவில்லையா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு என்னத்தா ரிலீஸ் பண்ணலாம் சரி. என் மகன் படம் வெளியாக நான் கோட்டை முன்னாடியும் உட்காருவேன் முதல்வர் வீட்டு முன்னாடியும் உட்கார்ந்து போராட்டம் பண்ணுவேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Simbu T Rajendar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment