/tamil-ie/media/media_files/uploads/2019/08/sss.jpg)
maanadu, maanadu movie, simbu, venkat prabu, director venkat prabhu, producer Suresh kamatchi, மாநாடு, சிம்பு வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க 'மாநாடு' படம் ஆரம்பமாகும் என அறிவித்து ஒரு ஆண்டாகிவிட்டது. இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க வெளிநாடு சென்று வந்தார் சிம்பு. ஆனாலும் படம் தொடங்கியபாடு இல்லை. படம் டிராப் என்று செய்திகள் உலாவந்த நிலையில், . அப்படியான வதந்திகளை நம்பாதீர்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி க கூறிவந்தார். இந்நிலையில் அவரே மாநாடு படத்தில் சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில், தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட்பிரபு டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ”நடிகர் சிம்புவுடன் பணியாற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில் காலம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த முடிவினை ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.