நம்பித்தான் ஆகணும் – சிம்பு இயக்கத்தில் 5 மொழிகளில் மகா மாநாடு

Simbu : நடிகர் சிம்பு இயக்கி நடிக்க உள்ள மகா மாநாடு படம், 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

simbu, maanadu, venkat prabhu, MaghaaMaanaadu, மகா மாநாடு, சிம்பு, டி.ராஜேந்தர், வெங்கட்பிரபு, மாநாடு
simbu, maanadu, venkat prabhu,

நடிகர் சிம்பு இயக்கி நடிக்க உள்ள மகா மாநாடு படம், 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளது, சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்திலான மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். வேறொரு நடிகரை கொண்டு, மாநாடு படம் புதிய பரிமாணத்தில் உருவாகும் என்றும் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.

இளமை துள்ளலுடன் படம் எடுக்கும் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி வந்தவுடனே, அவரது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த படத்திற்காக, சிம்பு தாய்லாந்திற்கு சென்று பிரத்யேக சிகிச்சைகள் எல்லாம் மேற்கொண்டு, உடல் எடையை கணிசமாக அளவிற்கு குறைந்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால், , திடீரென்று அப்படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். சிம்பு அடுத்ததாக ’மகா மாநாடு’ என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும். சுமார் ரூ. 125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் சிம்பு குடும்பத்துடன் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது ’மகா மாநாடு’ படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் உருவாக உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்..

இந்த செய்திய நம்பினாத்தான் சிம்பு ரசிகன்னு ஒத்துக்குவாங்களோ!!!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Simbu magaa maanadu venkat prabhu

Exit mobile version