லண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா? டி.ராஜேந்தர் விளக்கம்

நடிகர் சிம்புவுக்கு லண்டனில் உள்ள ஒரு கோடீஸ்வரரின் மகளுடன் tதிருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவருடைய தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் பற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

By: June 7, 2020, 3:47:41 PM

நடிகர் சிம்புவுக்கு லண்டனில் உள்ள ஒரு கோடீஸ்வரரின் மகளுடன் tதிருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவருடைய தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் பற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். ரசிகர்கள் அவரை செல்லமாக சிம்பு என்றே அழைக்கிறார்கள். நடிகர் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால், சிம்புவையும் முன்னணி நடிகைகளையும் இணைத்து கிசுகிசுக்களும் வெளியாகி வருகின்றன.

சிம்புவின் குடும்பத்தினரும் அவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று மணப்பெண்ணின் புகைப்படங்களையும் ஜாதகங்களையும் பார்த்து வருகின்றன. சிம்புவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பிடித்தமான பெண் அமையாததால் சிம்புவின் திருமணம் தள்ளிப்போக்கொண்டேர் இருக்கிறது. இதனால், சிம்புவின் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சிம்புவுக்கு லண்டனில் உள்ள கோடீஸ்வரரின் மகள் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. சிம்புவின் குடும்பத்துக்கு தூரத்து உறவினரான அந்த கோடீஸ்வரர் குடும்பத்துக்கு லண்டனில் சில கல்லூரிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. கொரோனா பொது முடக்கம் முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

இதனால், சிம்புவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் பற்றி வெளியான செய்திகள் வதந்தி என்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு திருமணம் குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், சிம்புவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Simbu marriage t rajendar statement do not believe rumor on simbu marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X