அடுத்தடுத்து ’ட்ராப்’ ஆகும் சிம்புவின் படங்கள்...

’மப்டி’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதால், படத்தைக் கைவிடவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

’மப்டி’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதால், படத்தைக் கைவிடவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simbu movie dropped

Simbu

Simbu: சிம்புவையும் வம்புவையும் பிரிப்பது மிகவும் கடினம் போல. ஆம்! அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் சிம்புவின் லிஸ்லிடில் அடுத்த சர்ச்சையும் இடம் பிடித்திருக்கிறது.

Advertisment

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கியிருந்தார். இதில், ஸ்ரீ முரளி நடித்த கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடித்து வந்தனர். இதன் படபிடிப்பு கர்நாடகாவில் நடத்தப்பட்டது. இதற்கிடையே தாய்லாந்துக்கு சுற்றுலாவுக்கு சென்று விட்டார் சிம்பு.

Simbu movie dropped மஃப்டி திரைப்பட அறிவிப்பு

இந்நிலையில் புதிய தோற்றத்தில் மீண்டும் சென்னை திரும்பி தன் ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனாலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவை 'மப்டி’ படத்திலிருந்து நீக்கியுள்ளதாகவும், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு, படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்து உள்ளார்.

அதில், பெங்களூருவில் தொடங்கப்பட்ட படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வரவில்லை என்றும், வந்தாலும் 4 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளார் என்றும், மேலும் அடுத்தக்கட்டப் படப்பிடிப்புக்காகத் தேதிகள் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் தனக்கு பணம் நஷ்டம் அடைகிறது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

’மப்டி’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதால், படத்தைக் கைவிடவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ படத்திற்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால், அந்தப் படத்திலிருந்து சிம்புவை நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. சிம்புவின் படங்கள் அடுத்தடுத்து ட்ராப் ஆவதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: