நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
‘தர்மதுரை’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’.
இந்த திரைப்படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடுமையாக உடற்பயிற்சி செய்த சமந்தா
நடிகை சமந்தா படு பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் அவர் பதிவேற்றம் செய்து வருவரு வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அதிக எடையை தூக்கும் விடியோவை பதிவேற்றியுள்ளார்.
தமிழ் சினிமா பின்தங்கிவிட்டது-நடிகர் அருண்பாண்டியன் கவலை
தமிழ் சினிமா பின்தங்கிவிட்டதாக நடிகர் அருண் பாண்டியன் கவலை தெரிவித்தார்.
ஆதார் என்ற படத்தில் அருண் பாண்டியன், கருணாஸ் ஆகியோர் நடித்துள்னர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அருண் பாண்டியன், தமிழ் சினிமா பின்தங்கிவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அதே மேடையில் இருந்த இயக்குநர் அமீர், தமிழ் சினிமா ஒரு காலத்திலும் பின்தங்கி இருக்கவில்லை. பின்தங்காது, ஏனென்றால் நாம் நாடோடி மன்னன், சந்திரலேகா போன்ற படங்களை கொடுத்தவர்கள் என்று பெருமையுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் தேவா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோரும் இருந்தனர்.
சிம்பு பட ஷூட்டிங் நிறைவு
நடிகர் சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு கெளதம் மேனனுடன் கூட்டணியில் இணைந்து நடித்துள்ளார் சிம்பு.
உடல் எடையைக் குறைத்துவிட்டு பழைய சிலம்பரசனாக மிடுக்கான தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார் சிம்பு.
விஜய் டிவி பிரபலம் வீட்டில் விலை உயர்ந்த பொருள் திருட்டு : போலீசில் புகார்
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
After a lot of hard work & sacrifice!
— Silambarasan TR (@SilambarasanTR_) April 15, 2022
It’s a wrap!!!#VendhuThanindhathuKaadu
Thank you @menongautham @IshariKGanesh @VelsFilmIntl @arrahman & the whole team ❤️🙏🏻 pic.twitter.com/1oNN0ExwJd
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சிலம்பரசன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
அந்தப் பதவில், அதிக கடின உழைப்பு மற்றும் தியாகத்துக்கு பிறகு இந்தப் பட ஷூட்டிங் முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“