scorecardresearch

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்; வண்ணப் படங்கள்: ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிம்பு டாக்டர் பட்டம் பெறும் வண்ண புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Simbu receives doctorate, STR, Simbu receives doctorate honour, Simbu fans trends DrSilambarasanTR, Silambarasan doctorate ceremony photos, சிம்புவுக்கு டாக்டர் பட்டம், சிம்பு டாக்டர் பட்டம் வண்ணப் படங்கள், வேல்ஸ் பல்கலைக்கழகம், சிம்பு ரசிகர்கள், Simbu, Vels University, Dr Simbu, Dr SilambarasanTR, Tamil cinema

சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. டாக்டர் பட்டமளிப்பு விழாவின்போது சிம்புவுக்கு பட்டமளிப்பு அங்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள் டாக்டர் அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வரும் எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் என்கிற சிம்பு, திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சிம்பு தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கோவில், வாலு, விண்ணைத்தாண்டி வருவாயா, ஈஸ்வரன், மாநாடு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. சிம்பு டாக்டர் பட்டம் பெற்றபோது அவருடன் அவருடைய தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ராஜேந்தர் ஆகியோர் உடனிருந்தனர். டாக்டர் பட்டம் பெற்ற தனது மகன் சிம்புவை டி.ராஜேந்தர் முத்தமிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்தினார்.

தமிழ் சினிமா உலகில் நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது இது முதல்முறையல்ல, இதற்கு முன்பு, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து வேல்ஸ் பல்கலைகழகத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் வேந்தரான டாக்டர் ஐசரி கே கணேஷ், கூறுகையில், “இந்த கவுரவ டாக்டர் பட்டத்திற்கு தகுதியானவர் நடிகர் சிலம்பரசன் டிஆர் தான் என இந்த ஆண்டு கமிட்டி உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த திரைப்படங்களில் நடித்தார் என்பதற்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கௌரவ டாக்டர் பட்டம் நடிகர் சிம்பு பட்டம் பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடங்களில் வெளியானது. இதையடுத்து, அவருடைய ரசிகர்கள் டாக்டர் சிம்பு என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வண்ண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Simbu receives doctorate fans trends drsilambarasantr his doctorate ceremony photos