STR Simbu : ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்குப் பிறகு, வேறெந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் நடிகர் சிம்பு. பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் கமிட்டானார். இருப்பினும் சில பிரச்னைகள் காரணமாக இதன் படபிடிப்பு துவங்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டதால், மாநாடு படத்தின் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் சிம்பு.
அண்மையில் சிம்புவிற்கு குவைத்தில் ரசிகர் மன்றம் ஒன்று திறக்க இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் மாநாடு படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கும் சிம்புவால், அந்த விழாவுக்கு செல்ல முடியவில்லை. ஆகையால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.
14, 2020
அதில், “குவைத்தில் இருக்கும் எனது ரசிகர்களுக்கு வணக்கம். சிறப்பு விருந்தினர்களுக்கு எனது நன்றி. குடும்பத்துக்காகவும், சுற்றி இருப்பவர்களுக்காவும் வீட்டை விட்டு இவ்வளவு தூரத்திற்கு சென்று உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காக, நாங்கள் எல்லாரும் காத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு உழைப்பைக் கொட்டி எனக்காக ஒரு மன்றம் திறப்பது எனக்கு பெருமையா இருக்கிறது. இதை மிகப்பெரிய மரியாதையாக நான் நினைக்கிறேன். உங்க அன்புக்கு நான் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் பத்தாது. என்னோட வெற்றியோ, தோல்வியோ என்னா ஆனாலும் நீங்க என் மேல வச்சிருக்க அன்பு குறையவில்லை. சிலம்பரசனே ஒரு நொடி என்னடான்னு நினைக்கிற அளவுக்கு என்ன திக்குமுக்காட வச்சிட்டீங்க.
14, 2020
உங்களை நான் புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சிடுங்க. உங்களை சந்தோஷமா வச்சிக்கணுங்கறது தான் என் ஆசை. ஆனா சில காரணங்களால என்னால சில விஷயம் பண்ண முடியாம போய் விடுகிறது. மன்றம் திறக்குற விஷயத்தைக் கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அங்கு நான் வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் மாநாடு படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதனால் என்னால் வர முடியவில்லை. நான் எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. எப்போதும் நான் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன். அதே போல் நீங்களும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் எனத் தெரியும். நீங்கள் இல்லாமல் நான் இல்லை” என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
சிம்பு ரசிகர்களிடம் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.