New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Simbu-Maanadu.jpg)
Simbu Maanadu
மாநாடு பட வேலைகள் சுமூகமாக முடிந்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக சிம்பு ஏற்கனவே வேண்டியிருந்தாராம்.
Simbu Maanadu
Simbu goes to Sabarimala after 27 years: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கை விடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்த நிலையில், சிம்புவின் கால்ஷீட் தேதிகளுக்காகக் காத்திருந்தது படக்குழு. ஆனால், சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், நடிகர் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது.
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019
இதற்கிடையே சிம்புவையும் சுரேஷ் காமாட்சியையும் சமரசம் செய்யும் முயற்சிகள் நீண்ட நாட்களாக நடைப்பெற்றன. அந்த முயற்சி தற்போது பலன் தந்திருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளும் பேசி தீர்க்கப்பட்ட நிலையில், ’மாநாடு’ படத்தில் நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு. அதோடு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார். இதற்கிடையே மாநாடு பட வேலைகள் சுமூகமாக முடிந்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக சிம்பு ஏற்கனவே வேண்டியிருந்தாராம்.
இதையடுத்து, ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு, 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு. இதற்கு முன் 1992-ல், ’எங்க வீட்டு வேலன்’ படம் சிறப்பாக வந்த சமயத்தில், மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்தார் சிம்பு. தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.