சுதா கொங்கரா மூவி அப்டேட்; அடுத்த படத்தில் சிம்பு தான் ஹீரோ

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
sudha kongare

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்கள் மூலம் தமிழ் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் சுதா கொங்கரா. இவரது படங்கள் எல்லாமே நல்ல கதைக்களத்துடன் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது.

Advertisment

சுதா கொங்காரா தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்ககி வருகிறார். இதில், ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சுதா கொங்கராவின் அடுத்த படம்'வேட்டை நாய்' என்ற நாவலை தழுவி எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கதாநாயகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது சிம்பு அடுத்தடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த படங்களில் நடித்து முடித்த பின்னரே சுதா கொங்கராவின் படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Simbu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: