வெற்றியுடன் கைகோர்த்த சிம்பு... கேமியோ ரோலில் நெல்சன்; இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

வெற்றி மாறன் -சிம்பு கூட்டணி உருவாகவுள்ள புதிய படத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றி மாறன் -சிம்பு கூட்டணி உருவாகவுள்ள புதிய படத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simbu Vetri Maaran  film goes on floors director Nelson Dilipkumar to play cameo Tamil News

வெற்றி மாறன் -சிம்பு கூட்டணி உருவாகவுள்ள புதிய படத்தில் இயக்குநர் நெல்சன் மற்றும் கவின் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் அண்மையில் வெளிவந்த தக் லைப் படத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 நடிக்கிறார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 என அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனிடையே, நடிகர் சிம்பு முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வெற்றி மாறன் -சிம்பு கூட்டணி உருவாகவுள்ள புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த கூட்டணி படப்பிடிப்பு பணியை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் லுக்கில் காணப்படுகிறார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும், நெல்சன் மற்றும் கவின் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

Silambarasan Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: