Advertisment

நிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
simbu wish dhanush, சிம்பு

simbu wish dhanush, சிம்பு

நம் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தாலும் நிஜத்தில் போட்டி வேண்டாம் என்று கூறி தனுஷின் 'வடசென்னை' திரைப்படம் வெற்றி பெற சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்.டி.ஆர் படம் வெளியாகும்போது தனுஷ் வாழ்த்து தெரிவிப்பதும், தனுஷ் படம் வெளியாகும்போது எஸ்.டி.ஆர் வாழ்த்து தெரிவிப்பதுமான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

தனுஷை வாழ்த்திய சிம்பு :

அந்த வகையில் இன்று தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அதிகாலை காட்சி ஆரம்பமாகிவிட்டதை அடுத்து இப்படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக எஸ்.டி.ஆர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது வாழ்த்து செய்தியில் கூறியபோது, நீங்கள் நடித்த வடசென்னை' திரைப்படம் வெற்றி அடைய எனது குடும்பத்தினர், ரசிகர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.

simbu, சிம்பு எஸ்.டி.ஆர் வாழ்த்து கடிதம்

“அன்புக்குரிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் 'வடசென்னை' படக்குழுவுக்கு என் சார்பாகவும், என் குடும்பம் மற்றும் ரசிகர்கள் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையில் எங்களுக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. என் ரசிகர்களும், என்னைப் பின்தொடர்பவர்களும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். 'வடசென்னை' வெற்றிப்படமாக அமையும்” என்று கூறியுள்ளார்.

Dhanush Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment