காவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு!!!

நீர்நிலைகளை ஆய்வு செய்த பின்பு, மாலை செய்தியாளர்களை சந்தித்து முழு விபரம் அளிக்க இருப்பதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்

நடிகர் சிம்பு திடீரென்று  சமூக ஆர்வலர் பியூஸ் மானிஷ் உடன் இணைந்து  சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி ரசிகர்கள், தனிக்கென தனி வழி என்று சென்றுக் கொண்டிருந்த  நடிகர் சிம்பு. சமீப காலமாக அரசியல் குறித்த கருத்துக்களை  அதிரடியாக தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி காவிரி விவகாரம் வரை  தமிழகத்தில் நடைப்பெறும் அனைத்து விதமான அரசியல்  பிரச்சனைகளிலும் சிம்பு கருத்து  தெரிவித்து வருகிறார்.

கடந்த வாரம்,  செய்தியாளர்களை சந்தித்த சிம்பு  கர்நாடகாவில் இருந்து காவிரி பெறுவதற்கு புதுவிதமான ஐடியாவை சொன்னார். முதலில் அவரின் பேச்சு பலரையும் சிரிக்க வைத்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவர் சொன்னதுன் அப்படியே நிகழ்ந்தது.   கர்நாடகா மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு தண்ணீரை வழங்கி அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அனைவரின் கவனமுக் சிம்புவின் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிம்பு, “ காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் மீது குற்றம் சொல்லக்கூடாது. மக்கள் பெயரில் அங்குள்ள அரசியல்வாதிகள்தான் எதிர்க்கிறார்கள். அரசியலுக்குள் இருக்கும் அரசியல் வெளியேற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சிம்புவின் இத்தகைய கருத்து  பரவலாக பேசப்பட்ட நிலையில், இன்று திடீரென்று சேலம் சென்றடைந்தார்.   சமூக ஆர்வலர் பியூஸ் மானிஷ் உடன்  சேலத்தில் உள்ள முக்கியமான நீர்நிலைகளையும் பார்வையிட்டார். அத்துடன், சேலத்தில் உள்ள மூக்கனேரியை பரிசலில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில்,  நீர்நிலைகளை ஆய்வு செய்த பின்பு, மாலை செய்தியாளர்களை சந்தித்து முழு விபரம் அளிக்க இருப்பதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில்  அதிரடியான கருத்துக்களை தெரிவித்த சிம்பு,  அடுத்தக்கட்டமாக காவிரிக்காக களத்தில் இறங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

×Close
×Close