Advertisment

உறுதியானது சிம்புவின் திருமணம்!

Simbu's Wedding: சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
simbu, நடிகர் சிம்பு

Simbu's Wedding: இயக்குநர் சுந்தர் சி-யின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Advertisment

இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக் குறைத்தார் சிம்பு. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கன்னட திரைப்படமான ’மஃப்டி’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிம்பு, இதன் படபிடிப்பை அடுத்த மாதம் துவங்க இருக்கிறார்.

இதற்கிடையே வரும் ஆகஸ்டில் சிம்புவின் திருமணம் நடக்கவிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

Tamil Cinema Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment