காதலர் தினத்திற்கு சிம்ரன் சர்பிரைஸ் அறிவிப்பு; ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமா உலகில் 1990-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சிம்ரன் இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு ஒரு இசை வீடியோவைப் பற்றி வெளியிட்டு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

Simran surprise on Valentines Day, சிம்ரன், காதலர் தினம், சிம்ரன் சர்பிரைஸ் அறிவிப்பு, simran announce about video music, Simran Special on Valentines Day, Mai Aur Meri Khwahishen
Simran surprise on Valentines Day, சிம்ரன், காதலர் தினம், சிம்ரன் சர்பிரைஸ் அறிவிப்பு, simran announce about video music, Simran Special on Valentines Day, Mai Aur Meri Khwahishen

தமிழ் சினிமா உலகில் 1990-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சிம்ரன் இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு ஒரு இசை வீடியோவைப் பற்றி வெளியிட்டு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

கோலிவுட்டில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொண்டவர் நடிகை சிம்ரன். இவர் திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார்.

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்த நடிகை சிம்ரன் நல்ல குணசித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக நடித்தது ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மை ஆவ்ர் மேரி க்வாஹிஷென்’ என்ற இசை வீடியோ காதலர் தினம் அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.


இந்தப் பாடலை பிரதீக்‌ஷாஸ்ரீ பாடியுள்ளார். யுக்புசல் இசையமைத்துள்ளார். ஸ்வப்னில் திவாரி பாடல் எழுதியுள்ளார் என்ரு குறிப்பிட்டுள்ளார். மேலும், இது பற்றி சிம்ரன் குறிப்பிடுகையில், டான்ஸ் ஆன்மாவுக்குள் மறைந்திருக்கும் மொழி, இந்த காதலர் தினத்தில் ‘மை ஆவ்ர் மேரி க்வாஹிஷென்’(நானும் எனது விருப்பங்களும்) வெளியிடப்படும். இந்த மொழி எல்லோருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல், காதலர் தினத்தில் சிம்ரன் ஸ்பெஷல் என்று ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

சிம்ரனின் இந்த காதலர் தின சர்பிரைஸ் அறிவிப்பை பார்க்கிற பலரும் இந்த இசைவீடியோவில் அனேகமாக சிம்ரனின் மாஸ் டான்ஸ் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் இணைந்து நடிக்கும் துருவ நட்சத்திரம் அரவிந்த்சாமி மற்றும் திரிஷா உடன் வணங்கமுடி பல தமிழ் திரைப்படங்களில் சிம்ரன் நடித்துவருகிறார். அதோடு, நடிகை சிம்ரன், நடிகர் பார்த்திபன் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் விரைவில் தயாரிக்க உள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Simran surprise announce about music video on valentines day

Next Story
‘வானம் கொட்டட்டும்’ ஸ்பெஷல்: எப்படியிருக்கிறது ‘பூவா தலையா’ பாடல் வீடியோ?Vaanam Kottattum
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express