1998-ல் நான் பண்ணது, 26 வருஷத்துக்கு பிறகு ட்ரெண்டிங்ல இருக்கு; நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி!

1999 ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல், 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையத்தில் வைரலாகியதையடுத்து நடிகை சிம்ரன் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல், 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையத்தில் வைரலாகியதையடுத்து நடிகை சிம்ரன் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
thottu thottu pesum

புகைப்படம்: எக்ஸ்

1998 ஆம் ஆண்டு வெளியான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல், 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி, டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து நடிகை சிம்ரன் தனது மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

நடிகை சிம்ரன், தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது வசீகரமான நடன அசைவுகளும், இயல்பான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அவர் திரையில் தோன்றிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அதில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல், 1999 ஆம் ஆண்டு வெளியான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பிரபலமான பாடல். நடிகை சிம்ரன் மற்றும் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் ஆகியோர் இந்த பாடலில் நடனமாடியுள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்த பாடலை ஸ்வர்ணலதா மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் பாடியுள்ளனர்.

சிம்ரன் தனது பேட்டியில் குறிப்பிட்டது போல, இந்தப் பாடல் 1998 ஆம் ஆண்டில் படமாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பாடலின் நடன அசைவுகளும், சிம்ரனின் கவர்ச்சியான தோற்றமும் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. பாடலில் ஒரு 'நல்ல வைப்' இருப்பதாகவும், அது இன்றும் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் சிம்ரன் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

சிம்ரன் கூறுகையில், "இந்த பாடல் மீண்டும் டிரெண்டிங் லிஸ்டில் வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். 1998-ல் நான் படமாக்கிய அந்தப் பாடல், இப்போதுள்ள இந்தத் தலைமுறை இளைஞர்களுடன் இணைவதற்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது. இது ஒரு மிகவும் ஐகானிக்கான பாடல். இப்போதும் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், அதில் ஒரு நல்ல உணர்வு (வைப்) உள்ளது." என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "'குட் பேட் அக்லி' என்ற திரைப்படம் வெளியானபோது, நான் டிவியில் இந்தப் பாடலைப் பார்த்தேன். அப்போது வெறும் 4 மில்லியன் பார்வைகள் மட்டுமே இருந்தன. ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு, தற்போது 62 முதல் 63 மில்லியன் பார்வைகளைத் தாண்டிவிட்டது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தின் உதவியால், பழைய பாடல்கள் கூட புதிய தலைமுறையினரை எளிதாகச் சென்றடைந்து, மீண்டும் பிரபலமாவது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

🎶 'சுல்தானா' மாதிரி 'மின்னல் ஒரு கோடி' பாடும் வைரல் ஆகணும்! – சிம்ரன் #Simran | #ThottuThottu | #MinnalOruKodi | #CinemaVikatan | #VikatanReels

Posted by Cinemavikatan on Saturday, June 7, 2025
Simran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: