sindhubaadh Full Movie, Vijay Sethupathi, சிந்துபாத் தமிழ் மூவி, sindhubaadh Tamil Cinema Latest News In Tamil
Sindhubaadh Movie Review And Release Updates: நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.
Advertisment
’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இதனை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். கே.புரொடக்ஷன் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து இதனை தயாரிக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
முன்னதாக இந்தப் படம் மே 16-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து பிரச்னைகள் நீடித்ததால் கடந்தவாரமும் ரிலீஸாகமல் போனது. இந்நிலையில் இன்று ரிலீஸாகியிருக்கிறது.
Live Blog
Advertisment
Advertisements
Sindhubaadh Review and Release Live Updates
சிந்துபாத் விமர்சனம் மற்றும் ரிலீஸ் சம்பந்தமான செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Highlights
13:11 (IST)27 Jun 2019
சிந்துபாத் கதை?
கடல் கடந்து சென்று மனைவியைத் தேடி கண்டு பிடிப்பதே சிந்துபாத் திரைப்படத்தின் கதை களம் என இயக்குநர் ரத்னக்குமார் தெரிவித்துள்ளார்.
மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத். Fitting way to get released after all Struggle. Lucky to see this film Last week. Get ready folks. Pure Vijay Sethupathyism after a long time.#Sindhubaadh All the best @vijaykartik_k 😊👍 pic.twitter.com/ddAdaD5xrG
மிகச் சிறந்த த்ரில்லர் படமாக எஸ்.யூ.அருண்குமார் இதனை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி என படத்தின் முக்கியக் கேரக்டர்கள் அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் யுவன்.
இன்று வெளியாகியிருக்கும் சிந்துபாத் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்படாததால், அந்தக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
11:34 (IST)27 Jun 2019
Sindhubaadh Release : சிந்துபாத் ரிலீஸ்... ஆனால் ஒரு சோகம்
ஒருவழியாக சிந்துபாத் திரைப்படம் ரிலீஸாகிவிட்டது. ரிலீஸில் பிரச்னை நீடித்த நிலையில், விஜய் சேதுபதி, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு முன் ’96’ உட்பட பல படங்களின் ரிலீஸ் பிரச்னையின் போதும், தனக்கு சம்பந்தமே இல்லை என்றாலும், தயாரிப்பாளருக்கு உதவுவதற்காக சம்பளத்தை விட்டுக் கொடுத்தார் விஜய் சேதுபதி.
#Sindhubaadh show started all over world and d sad story is once again #VijaySethupathi pays part of his salary back for an issue which is he no way related, for d sake of releasing d movie.. Hope d movie wins big..
Vijay Sethupathi's Sindhubaadh Release: விஜய் சேதுபதியும் அஞ்சலியும் இறுதியாக இறைவி படத்தில் நடித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து, இரண்டாவது முறை இவர்கள் இணைந்திருக்கிறார்கள். எஸ்.யூ.அருண்குமாரின் முந்தைய படமான ‘சேதுபதி’ ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் சிந்துபாத்திற்கு பெருமளவு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Highlights