Advertisment

Sindhubaadh Tamil Movie: விஜய் சேதுபதி - அஞ்சலி கெமிஸ்ட்ரி வேற லெவல்!

sindhubaadh Tamil Cinema Latest News In Tamil: முன்னதாக இந்தப் படம் மே 16-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sindhubaadh Full Movie, Vijay Sethupathi, சிந்துபாத் தமிழ் மூவி, sindhubaadh Tamil Cinema Latest News In Tamil

sindhubaadh Full Movie, Vijay Sethupathi, சிந்துபாத் தமிழ் மூவி, sindhubaadh Tamil Cinema Latest News In Tamil

Sindhubaadh Movie Review And Release Updates: நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன.

Advertisment

’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இதனை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். கே.புரொடக்‌ஷன் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து இதனை தயாரிக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

முன்னதாக இந்தப் படம் மே 16-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து பிரச்னைகள் நீடித்ததால் கடந்தவாரமும் ரிலீஸாகமல் போனது. இந்நிலையில் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

Live Blog

Sindhubaadh Review and Release Live Updates

சிந்துபாத் விமர்சனம் மற்றும் ரிலீஸ் சம்பந்தமான செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.














Highlights

    13:11 (IST)27 Jun 2019

    சிந்துபாத் கதை?

    கடல் கடந்து சென்று மனைவியைத் தேடி கண்டு பிடிப்பதே சிந்துபாத் திரைப்படத்தின் கதை களம் என இயக்குநர் ரத்னக்குமார் தெரிவித்துள்ளார். 

    12:34 (IST)27 Jun 2019

    என் மனதில் சிறப்பான இடம் உண்டு

    சிந்துபாத் திரைப்படத்திற்கு தனது மனதிலும், கரியரிலும் சிறப்பான இடமுண்டு என நடிகை அஞ்சலி ட்வீட்டியுள்ளார். 

    12:05 (IST)27 Jun 2019

    Sindhubaadh Review: சிந்துபாத் சூப்பர்

    மிகச் சிறந்த த்ரில்லர் படமாக எஸ்.யூ.அருண்குமார் இதனை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி என படத்தின் முக்கியக் கேரக்டர்கள் அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் யுவன்.

    11:48 (IST)27 Jun 2019

    காலைக் காட்சிகள் ரத்து

    இன்று வெளியாகியிருக்கும் சிந்துபாத் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்படாததால், அந்தக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் விரக்தியடைந்தனர். 

    11:34 (IST)27 Jun 2019

    Sindhubaadh Release : சிந்துபாத் ரிலீஸ்... ஆனால் ஒரு சோகம்

    ஒருவழியாக சிந்துபாத் திரைப்படம் ரிலீஸாகிவிட்டது. ரிலீஸில் பிரச்னை நீடித்த நிலையில், விஜய் சேதுபதி, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு முன் ’96’ உட்பட பல படங்களின் ரிலீஸ் பிரச்னையின் போதும், தனக்கு சம்பந்தமே இல்லை என்றாலும், தயாரிப்பாளருக்கு உதவுவதற்காக சம்பளத்தை விட்டுக் கொடுத்தார் விஜய் சேதுபதி. 

    Vijay Sethupathi's Sindhubaadh Release: விஜய் சேதுபதியும் அஞ்சலியும் இறுதியாக இறைவி படத்தில் நடித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து, இரண்டாவது முறை இவர்கள் இணைந்திருக்கிறார்கள். எஸ்.யூ.அருண்குமாரின் முந்தைய படமான ‘சேதுபதி’ ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் சிந்துபாத்திற்கு பெருமளவு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
    Vijay Sethupathi Anjali Yuvan Shankar Raja
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment