/indian-express-tamil/media/media_files/2025/09/10/singapore-former-president-sr-nathan-favourite-tamil-song-composed-by-deva-tamil-news-2025-09-10-13-12-26.jpg)
இசையமைப்பாளர் தேவா குறிப்பிட்ட அந்த சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர் நாதன் ஆவார். இவரது குடும்பம் தஞ்சையை பூர்விமாக கொண்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது.
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேவா ‘தேனிசைத் தென்றல்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இசையமைத்த பாடல்களில் கானா பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு. ‘சலோமியா’ , ‘உதயம் தியேட்டர்ல’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘கொத்தால் சாவடி’, ‘மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி’ போன்ற பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக உள்ளது.
இசையமைப்பாளர் தேவா 1997-ஆம் ஆண்டு 37 படங்களுக்கு இசையமைத்ததாகவும் தீபாவளிக்காக ஒரே நாளில் 8 எட்டு படங்கள் வெளியானதாகவும் கூறப்படுகிறது. இப்படி தனது இசையால் ரசிகர்கள் திக்குமுக்காட வைத்த தேவா தற்போது கான்செட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவா, சிங்கப்பூர் ஜனாதிபதி இறந்த போது ஒலித்த தனது பாடல் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “சிங்கப்பூர் ஜனாதிபதி என்னை அடக்கம் பண்ணும் போது ‘தஞ்சாவூர் மண் எடுத்து’ பாடலை போட்டு அடக்கம் செய்யுங்கள் என்று சொன்னார். அந்த பாட்டிற்கு இசையமைத்த எனக்கு அவ்வளவு பெருமையாக இருக்கிறது. ஒரு மேடையில் ரஜினி சொன்னார். சிங்கப்பூர் ஜனாதிபதி உயில் எழுதி வைத்திருக்கிறார். என்னை அடக்கம் செய்யும் பொழுது இந்த பாட்டை போட்டு என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்ன விஷயத்தை ஏன் தமிழ்நாட்டில் யாரும் தொலைக்காட்சியில் கூட போடவில்லை.ஏன் தேவாவை சொல்லியிருக்கலாமே. அவரை அடக்கம் செய்யும் பொழுது தேவா இசையமைத்த பாட்டு என்று சொல்வதில் என்ன குறைய போகிறது என்று கோபப்பட்டார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவா குறிப்பிட்ட அந்த சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர் நாதன் ஆவார். இவரது குடும்பம் தஞ்சையை பூர்விமாக கொண்டவர்கள் எனச் சொல்லப்படுகிறது. 1999 மற்றும் 2011-க்கு இடையில் சிங்கப்பூரின் 6-வது ஜனாதிபதியாகப் பணியாற்றிய இவர், அந்த நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய ஜனாதிபதியாகவும் அவர் இருந்தார்.
இரண்டு முழு பதவிக்காலங்கள் பதவி வகித்தார். அதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (SID) உள்ளிட்ட பொது சேவையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார். மலேசியாவுக்கான சிங்கப்பூரின் உயர் ஸ்தானிகராகவும், அமெரிக்காவிற்கான தூதராகவும் பணியாற்றினார். கடந்த 1924-ல் பிறந்த எஸ்.ஆர் நாதன் 2016 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.