நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா – மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார்.
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா ஐயர், வர்ஷா உள்ளிடோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
சில நாட்களுக்கு முன்பு ‘பிகில்’ படத்தில் இடம் பெற்றுள்ள, ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியானது. அந்தப்பாடல் பெண்களை கொண்டாடும் பாடலாக அமைந்திருப்பதால், ரசிகர்களிடம் சிறப்பு கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
All of us grew up with some incredible women as role models and icons. Join us to celebrate them ????#Bigil #SaluteMySingappenney #BigilWomenTribute #Singappenney @Ags_production @SonyMusicSouth @actorvijay @Atlee_dir @arrahman @Lyricist_Vivek pic.twitter.com/KJH4GQBBO2
— Archana Kalpathi (@archanakalpathi) July 26, 2019
அதில், ”நாம் எல்லோருமே ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்திருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள். அவர்களைக் கொண்டாடுவோம். பிகில் டிரிப்யூட் வீடியோ 30-ம் தேதி வெளியாகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.