/tamil-ie/media/media_files/uploads/2020/03/Anushka-Shetty-Samantha.jpg)
Anushka Shetty, Samantha
Anushka - Samantha : இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இயக்கியுள்ளார். தமிழில், ’அபூர்வ சாகோதரர்கள்’, ’மைக்கேல் மதன காமராஜன்’, ’ராஜ பார்வை’, ‘மகளீர் மட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் இங்கிருந்து எதுவரை செல்லும்?.
தற்போது பத்ரி வெங்கடேஷ் எழுதிய ஒரு வலைத் தொடரை இயக்கவிருக்கிறார் 88 வயதான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இந்தத் தொடர் பிரபல கர்நாடக இசைப்பாடகியான, பெங்களூர் நாகரத்னம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கப்பட உள்ளது.
இந்த வலைத்தொடர் தெலுங்கு மற்றும் தமிழில் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி இதைத் தயாரிக்கிறது. மேலும் இத்தொடரில், அனுஷ்கா ஷெட்டி அல்லது சமந்தா ஆகியோரில் யாராவது ஒருவர், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் இங்கிருந்து எதுவரை செல்லும்?.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.