Advertisment

இப்பவும் அதே சிரிப்பு... குழந்தைத்தனம்..! ரஜினி கையில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?

காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை சில பழைய புகைப்படங்களைப்  பார்க்கும்போதுதான் தெரிகிறது. அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் பிரபல பின்னணி பாடகி யார் என்று கண்டுபிடித்து கூறுங்கள்.

author-image
WebDesk
New Update
singer anuradha sriram with rajinikanth, singer anuradha sriram as little girl with rajin throw back photos, ரஜினிகாந்த் உடன் அனுராதா ஸ்ரீராம், குழந்தையாக அனுராதா ஸ்ரீராம், ரஜினி அனுராதா ஸ்ரீராம் புகைப்படம் வைரல், anuradha sriram rajinikanth throw back photo, rajini anuradha sriram photos goes viral, tamil cinema, playback singer anuradha sriram, trending photo, viral photo news

காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை சில பழைய புகைப்படங்களைப்  பார்க்கும்போதுதான் தெரிகிறது. அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் பிரபல பின்னணி பாடகி யார் என்று கண்டுபிடித்து கூறுங்கள்.

Advertisment

மனிதர்களுக்கு வயது ஆவதை போல, புகைப்படங்களுக்கும் வயது ஆகிறது (புகைப்படத்தில் இளமையாக இருந்தாலும்). ஆனால், அது மிகவும் தாமதமாகத்தான் தெரியவருகிறது. அப்போதெல்லாம், இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டதா என்று பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறது.

அப்படி, பிரபல பின்னணி பாடகி குழந்தையாக இருகும்பொது நடிகர் ரஜினிகாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவருடைய அதே சிரிப்பு,  குழந்தைத்தனத்தை வைத்து இந்த பிரபல பின்னணி பாடகி யார் என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என பல மொழிகளில் 2,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம். 1970ம் ஆண்டு ஜூலை 9ம் தெதி பிறந்த அனுராதா ஸ்ரீராம் சினிமா பின்னணி பாடகி மட்டுமல்லாமல் அவர் ஒரு கர்நாடக இசை பாடகியும் ஆவார். 1995ம் ஆண்டில் இருந்து சினிமா பாடல்களைப் பாடிவரும் அனுராதா ஸ்ரீராமுக்கு தற்போது 50 வயதாகிறது.

இந்த நிலையில், அனுராதா ஸ்ரீராம் குழந்தையாக இருக்கும்போது, நடிகர் ரஜினிகாந்த் அவரை கையில் தூக்கிவைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்து முதலில் திகைப்பவர்கள், அந்த குழந்தையின் சிரிப்பை வைத்து அனுராதா ஸ்ரீராமை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் காளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் படத்தில் அனுராதா ஸ்ரீராமும் சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளனர் என்பதை ரஜினி மக்கள் மன்றம் ட்விட்டர் குறிப்பிடுகிறது.

காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை இந்த புகைப்படம் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கூறுகிறது. இந்த புகைப்படத்தைப் பாருங்கள் இப்பவும் அனுராதா ஸ்ரீராமிடம் அதே சிரிப்பு, அதே குழந்தைத்தனம் மாறாமல் இருப்பதை உணர முடியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment