காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை சில பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் பிரபல பின்னணி பாடகி யார் என்று கண்டுபிடித்து கூறுங்கள்.
மனிதர்களுக்கு வயது ஆவதை போல, புகைப்படங்களுக்கும் வயது ஆகிறது (புகைப்படத்தில் இளமையாக இருந்தாலும்). ஆனால், அது மிகவும் தாமதமாகத்தான் தெரியவருகிறது. அப்போதெல்லாம், இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டதா என்று பார்ப்பவர்களை மலைக்க வைக்கிறது.
அப்படி, பிரபல பின்னணி பாடகி குழந்தையாக இருகும்பொது நடிகர் ரஜினிகாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவருடைய அதே சிரிப்பு, குழந்தைத்தனத்தை வைத்து இந்த பிரபல பின்னணி பாடகி யார் என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என பல மொழிகளில் 2,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம். 1970ம் ஆண்டு ஜூலை 9ம் தெதி பிறந்த அனுராதா ஸ்ரீராம் சினிமா பின்னணி பாடகி மட்டுமல்லாமல் அவர் ஒரு கர்நாடக இசை பாடகியும் ஆவார். 1995ம் ஆண்டில் இருந்து சினிமா பாடல்களைப் பாடிவரும் அனுராதா ஸ்ரீராமுக்கு தற்போது 50 வயதாகிறது.
Blast from the past.
Singer #AnuradhaSriram‘s childhood click with #Superstar #Rajnikanth.#Throwback pic.twitter.com/calFyTV1TL
— Cinema Ticket (@cinematkt) October 18, 2020
இந்த நிலையில், அனுராதா ஸ்ரீராம் குழந்தையாக இருக்கும்போது, நடிகர் ரஜினிகாந்த் அவரை கையில் தூக்கிவைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்து முதலில் திகைப்பவர்கள், அந்த குழந்தையின் சிரிப்பை வைத்து அனுராதா ஸ்ரீராமை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் காளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் படத்தில் அனுராதா ஸ்ரீராமும் சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளனர் என்பதை ரஜினி மக்கள் மன்றம் ட்விட்டர் குறிப்பிடுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்❤
சிறுமி பாடகி அனுராதா ஸ்ரீராம்????
சிறுவன் காஜா ஷெரிப்????காளி ???????????????????????? திரைப்படம்????????????#Thalaivar pic.twitter.com/grA6LL6Pur
— காளி (@ThalaivarRMM) March 29, 2020
காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை இந்த புகைப்படம் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கூறுகிறது. இந்த புகைப்படத்தைப் பாருங்கள் இப்பவும் அனுராதா ஸ்ரீராமிடம் அதே சிரிப்பு, அதே குழந்தைத்தனம் மாறாமல் இருப்பதை உணர முடியும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Singer anuradha sriram with rajinikanth throw back photos goes viral
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!