முதல் முறை உடல் உறவில் ரத்தப் போக்கு பற்றி புரிதல் இன்மை: பாடகி சின்மயி வீடியோ

முதல் முறையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சிலர் தவறான புரிந்துகொள்தலை கொண்டுள்ளனர் என்றும், அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாடகி சின்மயி கூறியுள்ளார்.

singer chinmayi on blood flow in first time intercourse for women Tamil News
Indian playback singer Chinmayi Sripaada on Lack of understanding about blood flow in first time intercourse for women Tamil News

Singer Chinmayi Sripaada Tamil News: பெண்ணியம் பற்றிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருபவராக சினிமா பாடகி சின்மயி ஸ்ரீபாதா அறியப்படுகிறார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் பல்வேறு கருத்துக்களை மிகவும் துணிச்சலாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்தி வருகிறார். அவரது கருத்திற்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், முதல் முறையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சிலர் தவறான புரிந்துகொள்தலை கொண்டுள்ளனர் என்றும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாடகி சின்மயி கூறியுள்ளார்.

இது குறித்து சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘முதல் முறை உடலுறவு கொள்ளும் போது சில தவறான புரிந்துகொள்தல் இருக்கிறது. அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுடன் முதல் முறை உடலுறவு கொண்டபோது பெண்ணுக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டால் ஆண்கள் அதை கொண்டாடுவார்கள். அந்த பெண் கன்னித்தன்மை உடையவர் என நினைத்து கொள்கிறார்கள்.

முதல் முறை உடலுறவு கொண்ட பிறகு ரத்தப்போக்கு என்பது ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை மட்டும் குறிக்காது. வேறு பல விஷயங்களும் அதில் உள்ளது. இதுபற்றி ஆண்கள், பெண்கள் என்ன இரு தரப்புமே சரியான பாலியல் கல்வியை நாட வேண்டும்.

ஆனால், அதே நேரத்தில் ஒருபோதும் ஆபாச படங்களிலிருந்து பாலியல் விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டாம். அது தவறான கருத்துக்களை கொண்டது. சரியான பாலியல் கல்வியை ஆண், பெண் இரு தரப்பினரும் திருமணத்திற்கு முன்பு கற்றுக்கொள்ள வேண்டும். இதைப் பற்றி பேசுவதற்கும் பெண்கள் பயப்பட வேண்டாம்.’ என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Singer chinmayi on blood flow in first time intercourse for women tamil news

Exit mobile version