மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தான நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. நடிகர், நடிகைகள் மட்டுமின்றி பல்வேறு துறையினரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மதுரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். ஜீவாவிடம் ஊடகவியலாளர்கள் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும், கேரளா திரையுலக பாலியல் புகார் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டதாகவும் விளக்கம் அளித்து விட்டதாகவும் தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் நடிகர் ஜீவா பதிலளித்தார். இந்நிலையில், பாடகி சின்மயி, நடிகர் ஜீவாவின் கருத்துக்கு கேள்வி எழுப்பியயுள்ளார். அதில், எனக்குப் புரியவில்லை, தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என எப்படி கூறுகிறார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“