கணவர் ராகுல் ரவீந்திரனால் ‘ட்ரோலு’க்கு ஆளான சின்மயி

Fans Trolls Chinmayi: 59 வயது நாகர்ஜுனா, 28 வயது ரகுல் ப்ரீத் சிங்குடன் ரொமான்ஸ் செய்வதை எப்படி அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள். 

Chinmayi
Chinmayi with her Husband Rahul Ravindran

சர்ச்சைகளுக்குப் பெயர் போன பாடகி சின்மயி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் கணவர் ராகுல் ரவீந்திரன் தற்போது ’மன்மதுடு 2’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

தெலுங்குப் படமான இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகும் இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ரகுல் ப்ரீத் சிங் புகைபிடிப்பது போல ஒரு ஷாட் இடம்பெற்றிருக்கிறது. இதைக் குறிப்பிட்டு சின்மயியை கேலி செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

singer chinmayi rakul preet singh
மன்மதுடு டீசரில் ரகுல் ப்ரீத் சிங்

அதோடு கடந்த 2013-ம் ஆண்டு, நடிகர்கள் மகள் வயதுடைய பெண்ணுடன் எப்படித்தான் ரொமான்ஸ் செய்கிறார்களோ என்ற ரீதியில் ட்வீட் போட்டிருந்தார் சின்மயி. தற்போது அந்த ட்வீட்டை தூசு தட்டி எடுத்து 59 வயது நாகர்ஜுனா, 28 வயது ரகுல் ப்ரீத் சிங்குடன் ரொமான்ஸ் செய்வதை எப்படி அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

Chinmayi Tweet
Chinmayi’s Tweet in 2013

மீ டூ பிரச்னையில் அதிகம் பேசப்பட்ட சின்மயி, அதன் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Singer chinmayi rakul preet singh rahul ravindran

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express