/indian-express-tamil/media/media_files/2025/08/30/screenshot-2025-08-30-234615-2025-08-30-23-46-33.jpg)
ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கருப்பு வெள்ளை காலம் முதலே சினிமாவில் பட துவங்கியவர் இவர். துவக்கத்தில் எம்.எஸ்.வியின் இசையில் பல பாடல்களையும் பாடியிருக்கிறார்.
ஹோட்டல் ரம்பா என்கிற படத்தில்தான் முதன் முதலாக பாடினார். ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பின் 3 பாடல்களை பாடி இருந்த அவருக்கு எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான அடிமைப்பெண் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது அவர் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார்.
டைபாய்டு காய்ச்சல் வரவே எம்.ஜி.ஆர் பாடலை பாட ஒத்திகைக்கு அவரால் செல்ல முடியவில்லை. ஆனாலும், ஒரு மாதம் எஸ்.பி.பி-க்காக எம்.ஜி.ஆர் காத்திருந்தார். அப்படி உருவான பாடல்தான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல். அதன்பின் இளையராஜாவின் காலம் வந்தபோது அவரின் இசையில் பல நூறு பாடல்களை பாடினார் எஸ்.பி.பி.
70 மற்றும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல் லிஸ்ட்டில் இவர்களின் கூட்டணியில் உருவான பாடல்தான் இப்போதும் இருக்கிறது. எஸ்.பி.பி பாடும்போது பல குறும்பு வேலைகளை செய்வார். இவருடன் பாடும் போது பின்னணி பாடகி எஸ்.ஜானகியும், சித்ராவும் சிரமப்படுவார்கள். ஏனெனில், சோக பாட்டு பாடும்போது கூட எதையாவது செய்து சிரிக்க வைத்துவிடுவார்.
அதே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடி தனது குரல் வளத்தால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர் புகழ்பெற்ற பிரபல பாடகி ஜானகி. சிங்கார வேலனே தேவா.. பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.
இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம் எஸ்வி, ஏஆர் ரஹ்மான், அனிருத் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார். தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் ஜானகி, 6 வயது குழந்தை, 60 வயது கிழவன் என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடக்கூடிய திறமை கொண்டவர்.
இப்படி இந்த இரண்டு பாடகர்களும் மிகவும் குறும்பு காரர்கள் தான். அடிக்கடி கிண்டல் கேலி செய்து கொண்டு மிகவும் ஜாலியான இரண்டு பேர் தான். இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல பந்தம் உண்டு. இந்நிலையில் ஒரு பழைய நேர்காணலில் ஜானகி அவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
"நான் முதன்முதலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை ஆந்திராவில் ஒரு மெல்லிசைப் போட்டியில் சந்தித்தேன். அவர் பங்கேற்று மிகச் சிறப்பாகப் பாடினார். அவர் யாரையும் பின்பற்றவில்லை, ஆனால் அவரது சொந்தக் குரலில் பாடினார், மிகச் சிறப்பாகப் பாடினார். நான் மகிழ்ச்சியடைந்து அவருக்கு என் ஆசிகளை வழங்கி, 'மகனே, நீ மிகவும் நன்றாகப் பாடுகிறாய். நீ சினிமா துறையில் நுழைந்தால், நீ ஒரு பிரபல பாடகராகிவிடுவாய்' என்று சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். பின்னர், அவர் சினிமா துறையில் நுழைந்து ஒரு பெரிய பாடகியானார். 'ஜானகிஜியம்மா எனக்கு ஆசி வழங்கினார், நான் ஒரு பெரிய பாடகியாகிவிடுவேன் என்று சொன்னார்.
அவரால்தான் நான் ஒரு பிரபல பாடகியாகிவிட்டேன்' என்று பல மேடைகளில் அவர் கூறியிருக்கிறார். ஆனா ஒரு விஷயம் சொல்றேன். நான் நிறைய பொண்ணுங்களையும் பையன்களையும் ஆசீர்வதிச்சு, அவங்க ரொம்ப நல்லா பாட்டு பாடுவாங்க, பெரிய பாடகர்களா ஆகுறாங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க எல்லாரும் பிரபலமாயிடுவாங்களா? பாலசுப்ரமணியத்திடம் திறமை, அதிர்ஷ்டம், கடவுளோட கருணை இருந்திருக்கு. அவர் ரொம்ப புத்திசாலி, கிரகிக்கும் சக்தியும் அபாரமா இருந்துச்சு. அவர் களத்துக்கு வந்ததிலிருந்து, நாங்க நிறைய டூயட் பாடல்களை சேர்ந்து பாடியிருக்கோம்."என்று சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.