விரும்பி தான் அம்மா ஆனேன், ஆனா இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைக்கல; 2 குழந்தைகள் பெற்ற பாடகி கல்யாணி நாயர் ஓபன் டாக்!

பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல், பாடல்கள் எழுதுவதிலும், இசையமைப்பதிலும், குரல் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி வருபவர் கல்யாணி நாயர். அவர் குழந்தைகளை பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல், பாடல்கள் எழுதுவதிலும், இசையமைப்பதிலும், குரல் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி வருபவர் கல்யாணி நாயர். அவர் குழந்தைகளை பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
pradeep and kalyani nair

'செண்டுமல்லியா மனசுல மணக்குற நீ...' இந்த பாடலை கேட்டவுடன் நம் மனதில் நிற்பது அந்த பாடல் வரிகளை தாண்டி அதை பாடிய குரல் தான். அந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் பாடகி கல்யாணி நாயர். 

Advertisment

கல்யாணி நாயர் தமிழ்த் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க பெயர் பெற்ற பின்னணி பாடகியும், திறமையான இசையமைப்பாளரும் ஆவார். சென்னை நகரில் பிறந்து வளர்ந்த கல்யாணி, இசையின் மீதான ஆர்வத்தையும் கலை உணர்வையும் சிறுவயதிலேயே வளர்த்துக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். தனித்துவமான குரலும் உணர்ச்சி பூர்வமான பாடல் செய்முறையாலும் ரசிகர்களிடம் தனி இடம் பெற்றவர். வெவ்வேறு இசை வகைகளில் தன்னை பதித்து, பல திரைப்படங்களில் மனதில் நிற்கும் பாடல்களை வழங்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களிலும் பாடியதன் மூலம் ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞராக அவர் அடையாளம் பெறுகிறார். இசை அவரது தொழில் மட்டுமல்ல, அவரது ஆர்வமும் வாழ்க்கை முறையுமானது என்பதையும் பல நேரங்களில் அவர் நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

கல்யாணிக்கு இளம் வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம். 11 ஆம் வகுப்பு படிக்கும்போது, ஒரு புது பாடகரை தேடும் விளம்பரத்தைப் பார்த்து, முதல் பாடலை பாடினார். அதுவே அவரது இசை பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

பின்னணி பாடகியும் இசையமைப்பாளருமான கல்யாணி நாயர், பிரபல பாடகர் பிரதீப் குமாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு, இசை என்பது அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் தொழிலும், ஆர்வமும் என்பதால், இசையை மையமாகக் கொண்டு பல விரிவான விவாதங்கள், சிந்தனைகள் தம்பதிகளுக்குள் நடந்தன.

இந்த இசை சார்ந்த உரையாடல்கள், கல்யாணியின் இசை பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தன. அவர் படைப்பாற்றலை மேலும் விரிவாக்கி, இசையை ஒரு புதிய கோணத்தில் புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கின.

பிரதீப்பின் இசைப் பார்வை மற்றும் அனுபவம், கல்யாணியின் இசை அணுகுமுறையில் புதுமைகளை உருவாக்கக் காரணமானது.

இந்த இசை இணையம், இருவரது தொழில்முறை வளர்ச்சியிலும், நேர்த்தியான இசைச் சங்கமத்திலும் ஒரு முக்கிய பங்காற்றியது. அவர்களது ஒற்றுமையான இசை அனுபவம், சில சிறப்பான கூட்டணிப் படைப்புகளாகவும் வெளிப்பட்டுள்ளன.

இவர் தற்போது வெளிவந்த ஒரு நேர்காணலில் அவர் குழந்தை பெற்ற பிறகு என்னென்ன அனுபவிர்த்தார் என்பதை விரிவாக ஷேர் செய்துள்ளார். 

உங்கள் பசங்களை பற்றி சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு கல்யாணி, "பெரிய பொண்ணு பெயர் பூர்வி, இப்போது 12 வயது ஆகிறது. சிறிய பொண்ணுக்கு இப்போது 9 வயது ஆகிறது." என்று கூறினார். 

பிரதீப் அவர்கள் வெளியே இசை நிகழ்ச்சிக்காக செல்லும் போது எப்படி தனியாக குழந்தைகளை பார்த்துக்கொண்டீர்கள் என்று கேள்விக்கு அவர், "எனக்கு எபோதும் அவர் வீட்டிலிருந்தும் என் வீட்டிலிருந்தும் நிறைய உதவி இருந்தது. 

அனால் ஒரு சில வேலைகளை நான் தான் செய்ய வேண்டும் என்று இருக்கும். அபோது தான் உலகம் அப்படியே மாறிவிட்டது போல உணரும். அங்கு பிரச்னை என்னவென்றால் உங்களுக்கென்று ஒரு சொந்த நேரமே இருக்காது. அதை சமாளிப்பது தான் கடினம்.

அனைவரும் கூறும் அட்வைஸ் கேட்டு நடந்துகொள்ள வேண்டும். பிரதீப் முடிந்த வரை எனக்கு உதவியாக இருந்தார் அனால் அவர் இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். அந்தத் காலம் என்னையே நான் பலப்படுத்திக்கொண்டேன்." என்று ஒரு சிறிய புன்னகையுடன் கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: