15 வயதில் முதல் பாட்டு; அப்போ சுத்தமா தமிழே தெரியாது: விருப்பம் இல்லாமல் வந்து வெற்றி பெற்ற பாடகி இவர் தான்!

குழந்தைகள் பெரியவர்களான பிறகு, கல்யாணி நாயர் மீண்டும் இசை உலகிற்குள் நுழைந்தார். இந்த முறை, அது வெறும் ஒரு பயணமாக இல்லாமல், ஒரு புதிய அத்தியாயமாகத் தொடங்கியது.

குழந்தைகள் பெரியவர்களான பிறகு, கல்யாணி நாயர் மீண்டும் இசை உலகிற்குள் நுழைந்தார். இந்த முறை, அது வெறும் ஒரு பயணமாக இல்லாமல், ஒரு புதிய அத்தியாயமாகத் தொடங்கியது.

author-image
WebDesk
New Update
kalyani

தமிழ் திரையிசை உலகில், மென்மையான மற்றும் இனிமையான குரல்களுக்குச் சொந்தக்காரர்களில் பாடகி கல்யாணி நாயருக்குத் தனி இடம் உண்டு. பல பிரபலமான பாடல்களைப் பாடியிருந்தாலும், சில காலங்கள் அவர் பாட்டுக்கு இடைவெளி கொடுத்து இருந்தார். இருப்பினும் அவரது ப்லேலிஸ்டுகள் ரசிகர்களுக்கு தனி ரசனையை கொடுக்கும். இந்நிலையில் அவள் விகடனுக்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது இசைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை, மற்றும் எதிர்கொண்ட சவால்கள் குறித்துப் பேசியுள்ளார். 

Advertisment

திரைப்படங்களில் சில பாடல்களைக் கேட்டதும், "இப்பாடலை யார் பாடினது?" என்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் பாடகி கல்யாணி நாயர். இவரது இசைப் பயணம், பலருக்கும் தெரியாத ஒரு திருப்பங்கள் நிறைந்த கதை. 15 வயதில், தமிழே தெரியாமல், தனது முதல் பாடலை பாடி, பின்னர் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இசை உலகிற்குள் நுழைந்து வெற்றி பெற்ற இந்தப் பாடகியின் கதை, ஒரு உத்வேகம் அளிக்கும் பயணம்பற்றிபார்ப்போம்.

கல்யாணி நாயரின் இசைப் பயணம் சவால்களுடன் தொடங்கியது. தனது முதல் பாடல் பதிவான 'ஆலங்குயில் கூவும்' பாடலுக்குப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, அவருக்குத் தமிழ் சரியாகத் தெரியாததால் சிரமப்பட்டார். ஆனால், இசையமைப்பாளர் வித்யாசாகர் மற்றும் பாடகி ஹரிணி போன்றவர்களின் ஆதரவும் உதவியும் அவரது திறமையை வெளிக்கொணர உதவியது என்றார்.  தனது ஆரம்ப காலத்தில் இசை மீது அதிக ஆர்வம் இல்லாமல் வந்த கல்யாணி நாயர், தொடர்ச்சியான வெற்றிப் பாடல்களைப் பாடி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  

ஒரு வெற்றிகரமான பாடகியாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், கல்யாணி நாயர் தனது திருமணத்திற்குப் பிறகு குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக தனது இசைப்பயணத்தில் இருந்து விலக நேர்ந்ததாக கூறினார். இதுவே, அவர் ஏன் சில காலம் ரசிகர்களுக்குத் தெரியாமல் போனார் என்பதற்கான முக்கியக் காரணம் என்று அவரே குறிப்பிட்டார்.  

Advertisment
Advertisements

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு, கல்யாணி நாயர் மீண்டும் இசை உலகிற்குள் அடியெடுத்து வைத்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பிரதீப் குமார், ஷான் ரோல்டன் போன்ற புதிய தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். இது, அவரது இசைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. தற்போது, அவர் தனது சொந்த இசைக்குழுவுடன் சேர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

கல்யாணி நாயர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அவற்றில் சில, 'கோலி குண்டு கண்ணு' (எம்.மகன்), 'மழை நின்ற பின்பும்', 'யாரோடும் சொல்லாத', 'எம்புட்டு இருக்குது ஆசை' போன்ற பாடல்களை பாடியுள்ளார்.  

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: