scorecardresearch

பிரபல பின்னணி பாடகர் கே.கே மறைவு – சோகத்தில் திரையுலகம்

KK Dead News , Singer KK Death news : கொல்கத்தாவில் இசைக் கச்சேரியில் பங்கேற்றிருந்த பிரபல பாடகர் கே.கே திடீரென உயிரழந்தார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Singer KK Dead, KK Death News today

KK Dead Latest News :பிரபல பின்னணி பாடகர் கே கே என அழைக்கப்படும் கிருஷ்ணாகுமார் குன்னத், கொல்கத்தாவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 53. நஸ்ரூல் மன்சாவில் இரண்டு நாள் இசை கச்சேரிக்காக சென்றிருந்தார். ஆனால், நிகழ்ச்சியின் போதே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் இரவு 10 மணியளிவில் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனை கொண்டு வரப்பட்டதாக சிஎம்ஆர் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

நிகழ்ச்சியின் நடுவிலே கேகே உடல்நிலை சீராக இல்லாத போல் உணர்வதாக கூறியுள்ளார். இருப்பினும், நிகழ்ச்சி முடியும் வரை பாட்டு பாடியுள்ளார். அதன் பிறகு, அவரை எஸ்பிளனேட்வில் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அவர் உடல்நிலை திடீரென மோசமாகியுள்ளது. உடனடியாக, அவரை மருத்துவமனையில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், பாதி வழியிலே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேகேவுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது மரண செய்தி கேட்டு, திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்்த அவரது பாடல்கள் பல விதமான உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கள். ஓம் சாந்தி என பதிவிட்டிருந்தார்.

அவரது மறைவுக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாடகர் கேகே தனது முதல் மியூசிக் ஆல்பம் “Pal” மூலம் இசை பிரியர்கள் மனதில் இடம் பிடித்தார். அவர், தடப் தடப், தஸ் பஹானே,மாரி எண்ட்ரியான் உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் பாடியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Singer kk dies after performing at kolkata concert