வயதில் இளைய மாப்பிள்ளை: மகிழ்ச்சி பொங்கும் மாளவிகா கல்யாண போட்டோஸ்

சென்னையில் அடைமழைக்கு இடையே, கோலாகலமாக நடைபெற்ற மாளவிகா – அஸ்வின் காஷ்யப் ரகுராமன் திருமண விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

maalavika marriage photos, super singer maalavika sundar, Maalavika Sundar, Maalavika wedding photos, மாளவிகா, பாடகி மாளவிகா, மாளவிகா சுந்தர், மாளவிகா திருமணம், சூப்பர் சிங்கர் மாளவிகா, மாளவிகா திருமண புகைப்படம், Maalavika married her lover, Maalavika weds Ashwin Kashyap Raguraman, Singer Maalavika

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி மாளவிகா சுந்தர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தற்போது, சமூக ஊடகங்களில் மாளவிகா சுந்தர் திரைப்படம் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் பாடகி மாளவிகா சுந்தர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மனம் கொத்தி பறவை’ திரைப்படத்தில் என்ற பாடலைப் பாடினார். அதற்கு பிறகு, பல திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் திரைபடங்களில் நூற்றுக்கணக்கான பாடியுள்ளார்.

பாடகி மாளவிகா அண்மையில், சுந்தர், 33 வயதில் சரியான காதலைக் கண்டெடுத்தேன் என இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி தனது வருங்காலக் கணவரை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில், பாடகி மாளவிகா தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமனை சென்னையில் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் அடைமழைக்கு இடையே, கோலாகலமாக நடைபெற்ற மாளவிகா – அஸ்வின் காஷ்யப் ரகுராமன் திருமண விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாளவிகா – அஸ்வின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடகி மாளவிகாவை திருமணம் செய்துள்ள தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமன் மாளவிகாவை விட இளையவர் என்பது தெரியவந்துள்ளது. தன்னைவிட வயதில் இளையவரை திருமணம் செய்துகொண்டுள்ள மாளவிகாவின் மகிழ்ச்சி பொங்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Singer maalavika sundar married her lover wedding photos goes viral

Next Story
அஜித் படத்தில் எண்ட்ரி… சின்னத்திரையின் பெஸ்ட் மாமியார்… காயத்ரி சாஸ்திரியின் வாழ்க்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com