கேன்சர் நோய் தாக்கம், 8 மாதம் நரக வேதனை; 'சின்ன‌ சின்ன ஆசை' மின்மினி வாழ்க்கையில் இவ்வளவு சோகம்!

"சின்ன சின்ன ஆசை" பாடலின் வழியாக நம் இதயங்களைத் தொட்ட மின்மினியின் வாழ்வில், இவ்வளவு சோகமான தருணங்கள் இருந்திருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

"சின்ன சின்ன ஆசை" பாடலின் வழியாக நம் இதயங்களைத் தொட்ட மின்மினியின் வாழ்வில், இவ்வளவு சோகமான தருணங்கள் இருந்திருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
minmini

பின்னணிப் பாடகி மின்மினி ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கைப் போராட்டங்கள், உடல்நலப் பிரச்சனைகள், மற்றும் குடும்பத்தின் ஆதரவு பற்றி உருக்கமான தகவல்களைப் பற்றி அவள் விகடனுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். "சின்ன சின்ன ஆசை" பாடலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த பிரபல பாடகியின் வாழ்வில், நாம் அறியாத பல சோகங்களும், சவால்களும் நிறைந்திருக்கின்றன.

Advertisment

கடுமையான மூட்டுவலி மற்றும் புற்றுநோய் ஆகியவற்றால் தான் அனுபவித்த துன்பங்களைப் பற்றி மின்மினி வெளிப்படையாகப் பேசினார். தனது உடல்நலப் பிரச்சனைகளால், பாடும் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போனதையும், பாடல்களைப் பதிவு செய்யப் பயணம் செய்ய முடியாமல் போனதையும் அவர் விவரித்தார். இந்த நோய் தாக்கத்தினால், தான் எட்டு மாதங்கள் நரக வேதனை அனுபவித்ததாகவும், அதுவே தனது வாழ்க்கையில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மனம் திறந்து கூறினார்.

இந்த கடினமான காலகட்டங்களில் அவருக்குக் கிடைத்த ஆதரவு குறித்தும் பேசினார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் தன்னை ஒரு மகளாக நடத்தியதையும், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கவும், பொன்னேரியில் உள்ள ஒரு பிரார்த்தனை மையத்தில் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவும் தன்னை அழைத்துச் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மூத்த பாடகர் ஜெயச்சந்திரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர், ஜெயச்சந்திரன் தான் தன்னை சென்னைக்கு அழைத்து வந்து, தொழிலில் வாய்ப்புகளைப் பெற உதவியவர் என்று கூறினார். ஜெயச்சந்திரன் தனது உடல்நலப் பிரச்சனைகளைத் தன்னிடம் மறைத்து, தனக்கு மன உளைச்சல் ஏற்படாமல் பாதுகாத்ததையும் அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements

தனது வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில், தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து தான் பெறும் அசைக்க முடியாத ஆதரவுதான் தனக்கு ஒரு பெரிய பலம் என்று மின்மினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர்கள் அளித்த ஆதரவு, இந்த நோய்களில் இருந்து மீண்டு வர தனக்கு உதவியதாகவும் அவர் கூறினார். "சின்ன சின்ன ஆசை" பாடலின் வழியாக நம் இதயங்களைத் தொட்ட மின்மினியின் வாழ்வில், இவ்வளவு சோகமான தருணங்கள் இருந்திருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: