தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் பாடகி பி.சுசீலா

40 ஆயிரத்திற்கு மேல் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனைப் படைத்துள்ள பாடகி பி.சிசுலா தற்போது இசையமைப்பில் களம் இறங்கியுள்ளார்.

தென் திரையுலகில் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்பவர் பி. சுசீலா. இதுவரை திரைப்படங்களில் பாடல்கள் மட்டுமே பாடி வந்த சுசீலா தற்போது தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுசீலா, 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்படப் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்று, அதிகமான பாடல்களை பாடிய பாடகர் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார். இவ்வாறு பெருமைமிக்க பாடகியான சுசீலா இசையமைப்பில் களம் இறங்கியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

dr.anitha, mbbs

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, தற்போது “டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ்” என்ற திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க, மாணவி அனிதா வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம். கடந்த ஆண்டு, நீட் தேர்வால் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையை இழந்த மாணவி அனிதா, மனவேதனியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அனிதாவின் வாழ்வைத் திரைப்படமாக தயாரிக்கும் பணியில் ஆர்.ஜே பிசர்ஸ் மற்றும் ரன் ஸ்டுடியோ ஈடுபட்டு வருகிறது. இதில், அனிதா கதாப்பாத்திரத்தில் பிக் பாஸ் ஜூலி நடிக்கிறார். இப்படத்தின் கதை நெகிழ வைத்ததால் இப்படத்திற்கு பி.சுசீலா இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்பே இப்படத்திற்கு எதிர்பார்ப்புக்கள் நிறைந்துள்ளன. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராகப் பாடகி பி.சுசீலா அவதாரம் எடுத்துள்ளது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close