பிரபல பாடகி ரம்யா என்.எஸ்.கே தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம்! நான் ஏன் மீண்டும் உடல் எடையை அதிகரித்திருக்கிறேன் என பலரும் கேட்டு வந்தார்கள். நான் அந்த கேள்விகளுக்கு விரைவில் பதிலளிப்பதாக சொல்லியிருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நான் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தேன். அதனால் தான் உடல் எடை கூடியது. இனி மீண்டும் எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிகளில் நான் கவனம் செலுத்தப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ரம்யா என்.எஸ்.கே புகழ்பெற்ற நடிகர்களின் பேத்தி. தாயின் வழியில் என்.எஸ். கிருஷ்ணனும், தந்தை வழியில் ஐம்பதுகளின் சூப்பர் ஸ்டார் கே.ஆர். ராமசாமியும் அவரது தாத்தாக்கள். ரம்யா பல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்த கெளதம் மேனனின், ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் இடம்பெற்ற “சற்று முன்பு” பாடலால் மிகவும் பிரபலமானார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்று ரம்யாவும் புகழ் பெற்றார். 2019-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சத்யாவை அவர் மணந்ந்துக் கொண்டார். தங்கள் குழந்தையுடன் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரம்யா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”