/indian-express-tamil/media/media_files/2025/09/09/singer-sathyan-trending-viral-video-roja-roja-song-tamil-news-2025-09-09-16-02-41.jpg)
என்னதான் பாடல்கள் பிரபலமானாலும் சில கலைஞர்கள் பிரபலமாவதில்லை. இந்த பாடலை இந்த கலைஞர் தான் பாடினாரா? என்ற எண்ணம் ஏற்படும் வகையில் பல கலைஞர்கள் ஏராளமான மெகா ஹிட் பாடல்களை பாடியுள்ளனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம். மக்கள் இவரை நினைவில் வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் சத்யன் மகாலிங்கம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார்.
அதாவது, இளைஞர் ஒருவர் ’காதலர் தினம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரோஜா ரோஜா’ பாடலை படத்தில் வருவது போல் அதே வசீகரத்துடன் பாடியுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் யார் இந்த இளைஞர்? என தேடுகையில், அது பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம் என்பது தெரியவந்துள்ளது.
பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம் 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கமல்ஹாசன் நடித்த ‘ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ‘கலக்க போவது யாரு’, ‘சரோஜா’ படத்தில் ‘தோஸ்து படா தோஸ்து’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ‘அட பாஸு பாஸு’, கழுகு படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ அவசரம் போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
இப்படி ஹிட் பாடல்களை பாடிய பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கத்திற்கு கொரோனா காலத்தில் யாரும் பட வாய்ப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் ஹோட்டலில் வேலைக்கு சென்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. பல வருடங்கள் இவரது திறமை வெளிப்படாமல் இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில் சத்யன் மகாலிங்கம் உலக அளவில் பிரபலமாகிவிட்டார்.
இந்த வீடியோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள் திறமைமிக்க பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கத்திற்கு ஏன் வாய்ப்புகளும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு கலைஞரின் திறமை ஒருபோதும் வீணாகாது காலம் கடந்தும் வெளிப்படும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
யார் இந்த சத்யன் மகாலிங்கம்?
பாடகர் சத்யன் மகாலிங்கம் மேடை பாடகராகவே முதலில் அறிமுகமானார். இவர் பல்வேறு இசைக்குழுவுடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் சத்யன் 1999 -ஆம் வருடத்தில் பாடிய 'ரோஜா ரோஜா' பாடல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதான் சோசியல் மீடியா பவர் 🔥🔥🔥
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) September 8, 2025
இவர ட்ரேண்ட் ஆக்கி எல்லாரும் தேட வெச்சு அவர கண்டுபுடிச்சுருக்காங்க 😍 pic.twitter.com/xldIDBK4LV
இந்த பாடல் பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் குரலில் ‘காதலர் தினம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. சத்யனின் இந்த மேடை பாடல் ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் அவரது தனித்துவமான குரல் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us