New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Senthil-Ganesh.jpg)
சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் இடம்பெறற மதுரை வீரன் பாடலை முதலில் ராஜலட்சுமி பாடினார்.
நாட்டுப்புற பாடல்கள் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கிலும் பாப்புலர் ஆன ஜோடி செந்தில் கனேஷ் ராஜலட்சுமி. அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து பாடிய என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலை சார்லி சாப்ளின் 2 என்ற படத்திலும் பாட வாய்ப்பை பெற்று தந்தது.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவருமே பங்கேற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் இருவரும் சேர்ந்து பாடிய நாட்டுப்புற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியே அவர்களின் வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடக்கும் கச்சேரிகளில் பாடிவரும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இருவரும், சினிமாவிலும் பல பாடல்களை பாடியுள்ளனர். இதில் செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போனது. அதே சமயம் புஷ்பா படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை பாடி ராஜலட்சுமி புகழ்பெற்றார்.
அதேபோல் சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் இடம்பெறற மதுரை வீரன் பாடலை முதலில் ராஜலட்சுமி பாடினார். ஆனால் அந்த பாடல் வெளியாகும்போது படத்தில் நாயகி அதிதி ஷங்கர் குரலில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ராஜலட்சுமி இது தொடர்பாக விளக்கம் அளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது கணவன் மனைவி இருவரும் தனியாக ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வரும் நிலையில், செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியரின் பிள்ளைகளுக்கு சமீபத்தில் காதணி விழா நடந்தது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் அம்மாவட்ட ஆட்சியர் பங்கேற் குழந்தைகளை வாழ்த்தியுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செந்தில் கணேஷ் ‘எங்களது இல்ல விழாவில் கலந்துகொண்டு, குழந்தைகளை வாழ்த்திய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மதிப்பிற்குரிய திரு. கவிதா ராமு அம்மா அவா்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் குழந்தைகள் மற்றும் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.